இந்திய விமான படையை வலிமையாக்கும் 56 புதிய விமானங்கள்!! மத்திய அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு இந்திய விமான துறையில் தனியார் நிறுவனத்திற்கு இடமளித்ததை தொடர்ந்து ரூ.13,000 கோடி மதிப்புள்ள ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்திய விமான படைக்கு 56 புதிய போக்குவரத்து விமானங்கள் பெற இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த திட்டம் முந்தைய அரசின் கனரக தொழிற்சாலைகள் & பொது நிறுவன அமைச்சர் பிரபுல் பட்டேல் மற்றும் சில முக்கிய அமைச்சர்களின் எதிர்ப்பால் இந்த திட்டம் கிடப்பில் போடபட்டது. அதை இப்போது மோடி தலைமையிலான அரசு துசி தட்டி வருகிறது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரான அருண் ஜேட்லி வரும் ஜூலை 19ஆம் தேதி புதிய விமானங்களை வாங்குவதற்கான ஏல அறிக்கையை சமர்பிக்க காலகெடுவை உயர்த்துள்ளார். மேலும் இதற்கான முக்கிய முடிவுகள் அனைத்து ஏற்கனவே எடுக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16 மட்டுமே இறக்குமதி.. அப்ப மீதமுள்ளவை??

16 மட்டுமே இறக்குமதி.. அப்ப மீதமுள்ளவை??

இந்த 56 விமானங்களில் 16 விமானங்கள் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இற்குமதி செய்யப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை தெவித்துள்ளபது. இந்த 56 விமானங்களும் இந்திய விமான படையில் இருக்கும் பழைய விமானத்திற்கு பதிலாக வருபவை.

ஏலம்
 

ஏலம்

இந்த 56 விமானங்களை ஏல முறையில் வாங்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக எம்பரார், லாக்ஹீட் மார்ட்டீன், ஏர்பஸ், இல்யஸின், கஸா, சாப், அலீநியா, ஏரோநாட்டிகா மற்றும் எஸ்.டி.ஈ உக்ரேன் என 10 விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏல படிவங்களை சமர்ப்பித்துள்ளது.

முதல் நிறுவனங்கள்

முதல் நிறுவனங்கள்

பாதுகாப்பு துறையில் இந்தியாவில் முதன் முதலில் காலடி வைக்கு தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தை மிகவும் சவாலானதாக மட்டுமே இருக்கும், இதில் தயாரிப்பு துறை அனைத்து பொதுத்துறை கட்டுப்பாட்டுகுள் இருக்கும்.

ஆயுத இறக்குமதி

ஆயுத இறக்குமதி

மேலும் இந்திய ராணுவம், கப்பல் படை, மற்றும் விமான படைக்கான உபகரனகள், சாதனைகளில் 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் அதிகளவில் இறக்குமதிக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. இதனை களையவும், இந்திய பாதுகாப்பை அதிகரிக்கவவே இந்த முயற்சி என மத்திய அரசு தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Private sector set to enter Indian aerospace market

The Modi government is all set to kick-start private sector entry into domestic aerospace arena by giving the green signal to the Rs 13,000 crore project to supply 56 transport aircraft to IAF.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X