மும்பை: ஜெர்மன் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது ஏ3 செடான் வகை கார் தயாரிப்பை அவுரங்காபாத் தொழிற்சாலையில் துவங்கியது. இந்நிறுவனம் இத்தொழிற்சாலையில் தயாரிக்கும் 6வது மாடல் இது. ஆடி நிறுவனம் தனது தயாரிப்பை துவங்கிய நிலையில் ஏ3 செடான் வகை கார்கள் இந்திய சந்தையில் வரைவில் குறைந்த விலையில் வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
தொடர் தயாரிப்புகள்
இந்நிறுவனம் இந்திய தொழிற்சாலையில் செடான் வகை கார்களான ஏ6 மற்றும் ஏ4 வகைகளும் மற்றும் ஸ்போட்ஸ் வகை கார்களான க்யூ 5, க்யூ 7, க்யூ 3 ஆகிய கார் மாடல்களை இத்தொழிற்சாலையில் துவங்கியுது.
வளர்ச்சி பாதையில் ஆடி
இந்த சந்தையில் எங்களின் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்க நாங்கள் இந்தியாவில் ஏ3 வகை கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் இந்திய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும் என நம்புகிறோம் என ஆடி நிர்வாக குழு உறுப்பினரான ஹூபர்ட் வால்ட் தெரிவித்தார்.
தொழிற்சாலை
போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்க உலக தரம்வாய்ந்த இன்பாரஸ்டக்சர், சிறப்பான செயல்முறைகள், மற்றும் திறமைவாய்ந்த பணியாளர்கள் என அனைத்து கொண்டு இத்தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக ஹூபர்ட் தெரிவித்தார்.
விலை குறைப்பு
மேலும் ஒரு காரின் விலை அதிகரிப்பில் முக்கிய பங்காற்றுவது அதன் போக்குவரத்து. இதனால் போக்குவரத்து செலவுகளை பெறும் அளவில் குறைக்கும் லாஜிஸ்டிக்ஸ் தடங்களை வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications