பேஸ்புக் நிறுவனத்தின் புதிய "பை" பட்டன்!! பீதியில் அமேசான்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹூஸ்டன்: உலகில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் சங்கமிக்கும் ஒரே இடம் இந்த பேஸ்புக் தான். இத்தனை கோடி வாடிக்கையாளர்களை பெற்ற இந்நிறுவனம் ஒரு புதிய யுத்தியை பயன்படுத்த உள்ளது, இதனால் ஆன்லைன் சில்லறை விற்பனை ஜாம்பவானான அமேசான் நிறுவனத்திற்கு இப்போது வயிற்றை கலக்கியுள்ளது.

 

பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அனுப்பும் விளம்பரம் மற்றும் நியூஸ் பீட்ஸ் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த பேஸ்புக் களமிறங்கயுள்ளது. இந்நிறுவனத்தின் வருகையால் இத்துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக்கொண்டு இருக்கிறது.

(Read this: A few useful steps to accumulate gold for marriage or investment)

ஒரு பட்டன் தட்டினால் போதும்...

ஒரு பட்டன் தட்டினால் போதும்...

இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் கம்பியூட்டர் மற்றும் மொபைல் பயன்படுத்தும் போது வரும் விளம்பரங்களில் இருக்கும் பை "Buy" என்ற பட்டனை தட்டினால் பேஸ்புக்கில் இருந்து வெளியே வாராமல் பொருட்கள் வாங்கு தளத்திற்கு பேஸ்புக் கொண்டு செல்லும். இந்த எளிமையான முறையில் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக கவரும் எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

டெஸ்டிங்

டெஸ்டிங்

இந்த சேவையை பயன்பாட்டுக்கு பேஸ்புக்கு நிறுவனம் இன்னும் கொண்டுவரவில்லை, இதனை மெருகேற்ற மேலும் டெஸ்டிங் தளத்தில் பேஸ்புக் வைத்துள்ளது. மேலும் அமெரிக்க பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கும் வரும் வியாழன் அன்று இந்த சேவை பெற முடியும் எனவும், இதனை தொடர்ந்து விரைவில் உலக நாடுகள் முழுவது அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெற்றி பெற வில்லை..
 

வெற்றி பெற வில்லை..

இதற்கு முன்பே இந்நிறுவனம் தனது பேஸ்புக் தளத்தில் "பேஸ்புக் கிரேடிட்ஸ்", "பேஸ்புக் கேம் கார்ட்ஸ்" என இத்தகைய முயற்சியை செய்தது, ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என இந்நிறுவனத்தின் வர்த்தக பிரிவு அதிகாரி ஒரு தெரிவித்தார்.

டிவிட்டர்

டிவிட்டர்

அமேசான் நிறுவனம் மற்றும் டிவிட்டார் அகிய நிறுவனபங்கள் தங்கள் தளத்தில் பை நவ் என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ள செய்தனர் இதை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் இதில் இறங்கியுள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

இப்புதிய சேவையை பற்றி பேஸ்புக் மேலும் கூறுகையில் இந்நிறுவனம் இச்சேவை மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது, இதனால் வாடிக்கையாளர் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இதை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook to challenge Amazon soon?

After making billions connect socially on its network, Facebook is testing a new feature designed to let users buy products directly from ads and posts on its news feed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X