சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் இருவரையும் குற்றம்சாட்ட போதுமான சாட்சியங்கள் தயாராக உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி புதன்கிழமை காலையில் தெரிவித்தார். இதனால் சன் டிவி நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், மாறன் சகோதரர்களுக்கு உண்டு. இந்நிலையில் வலுக்கட்டாயமாக சிவ குழுமத்தின் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்பே முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் 2ஜி அலைக்கதிரை ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கியதாக வழக்கில் உள்ளது. இதற்கான முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் உள்ளதாக முகுல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மேலும் சூடு பிடிக்க துவங்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை இன்னும் முடப்படதாக நிலையில் சன் குழுமத்திற்கு மேலும் ஒரு தலைவழியாக மேக்சிஸ் வழக்கு கிளம்பியுள்ளது.
செய்தியின் எதிரொலி
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அளித்த தகவல் இந்தியா முழுவதும் பேஸ்புக்கை விட வேகமாக பரவியது இதனால் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 459 என்ற நிலையில் துவங்கி 415 ரூபாய் வரை சரிந்தது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கி முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் 9.60 சதவீதம் சரிவை தழுவியது.
சிபிஐ
மேலும் முகுல், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இருவரையும் இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய போதுமான தகவல்களை உள்ளதாகவும், மாறன் சகோதரர்கள் செய்த முறைகேடான விஷயங்கள் மற்றும் ஏர்செல் மற்றும் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகள் உள்ளடக்கிய அறிக்கையை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தார்.
மாறுபட்ட கருத்துகள்
முகுல் அளித்த சாட்சியங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் மாறன் சகோதரர்களை விசாரணை முடிவு செய்திருக்கும் வேலையில், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் - சிபிஐ
கடந்த நவம்பர் மாதம் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, இதில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை ஆய்வு செய்ததில் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கு எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் இருந்தது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்கு நிலை??
சன் டிவி பங்கு 10 சதவீதம் சரிந்திருக்கும் நிலையில் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 0.56 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications