உணவு தாணிய பற்றாக்குறையை தீர்க்க கனடாவில் இருந்து இறக்குமதி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய விசாயத்திற்கு இந்த வருடம் மோசமான வருடம் என்று சொன்னால் மிகையாகாது, இதற்கு முக்கிய காரணம் பருவ மழை தான். பருவ மழை பாதிப்பால் இந்தியாவில் காரீப் காலத்தில் தாணியங்களின் வளைச்சல் கணிசமாக குறைந்தது. இதனால் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்த பருப்பு மற்றும் தாணியங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த இறக்குமதியின் மூலம் இந்தியாவில் தாணிய கட்டுப்பாட்டையும், விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும். இறக்குமதி செய்வதால் விலையேற்றத்தை குறைக்க முடியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு ஏற்றுமதியை குறைத்தாலும் விலையேற்றம் குறையும். இந்தியாவில் இருந்து அதிகளவில் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலேயே உணவு பொருட்களின் விலை உயருகிறது.

கனடா

கனடா

இதே காலகட்டத்தில் கனடாவின் சஸ்காச்சுவான் பகுதியில் பருப்பு மற்றும் பட்டாணியின் விளைச்சல் அமோகமாக இருந்தது. குறிப்பிடதக்கது. இதனால் இந்தியாவில் இதன் விலையை கட்டுப்படுத்த கனடாவில் இருந்து பருப்பு மற்றும் பட்டாணியா இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரம்ஜான் - தீபாவளி

ரம்ஜான் - தீபாவளி

ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கனடாவில் இருந்து குறைவான விலையில் பயிர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த இறக்குமதி ரம்ஜான் பின்பு துவங்கி தீபாவளி வரை நடக்கும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கோதுமை ஏற்றுமதி
 

கோதுமை ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2013-14ஆம் ஆண்டில் சுமார் 9261.60 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அதிகளவில் பங்களாதேஷ் 3171.25 கோடி ரூபாய் பதிப்பிலான கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசி

இந்தியாவில் இருந்து 2013-14ஆம் ஆண்டு காலத்தில் சுமார் 29,299.96 கோடி மதிப்பிலான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2012-13ஆம் ஆண்டு காலத்தில் 19,409.38 கோடி ரூபாய் மதிப்பிலான பாஸ்மதி அரிசி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

இதே 2013-14ஆம் ஆண்டில் 1,746.34 கோடி மதிப்பிலான பருப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பீர் ஏற்றுமதி

பீர் ஏற்றுமதி

உணவு பொருட்களில் மதுவும் அடங்கும், அந்த வகையில் 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு 19,245.80 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள்

காய்கறிகள்

2012-13ஆம் ஆண்டை விட 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகளவிலான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் காய்கறியில் விலையேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் மத்திய அரசிற்கு உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை அதிகரித்துள்ளது.

தக்காளி

தக்காளி

கடந்த 2 நிதியாண்டுகளில் இந்தியாவில் இருந்து தக்காளியின் ஏற்றுமதி சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெங்காயம்

வெங்காயம்

தக்காளியை போல் வெங்காயமும் கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணமாக தெரிகிறது.

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

கடந்த ஒரு வருடத்தில் சில்லறை பணவீக்கம் 9.87 சதவீதத்தில் இருந்து 7.31 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canada to meet India’s demand for pulses

With monsoon playing truant and posing a question mark on the yield of pulses in the kharif season, Canada is positioning itself to meet India’s growing demand for lentils (masoor) and yellow peas (pili matar) grown in abundance in its Saskatchewan province.
Story first published: Thursday, July 24, 2014, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X