அதிரடியான சலுகை!! அசத்தலான மார்க்கெட்டிங்!! கிடைத்தது 2வது இடம்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய விமான போக்குவரத்தில் கடந்த சில வருடங்களாக விமான நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் போட்டிகளை சமாளிக்க உள்ளநாட்டு விமான போக்குவரத்திற்கு அதிரடியான சலுகைகளை அள்ளித் தெளித்தது. இதனால் இந்நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தாலும், மக்களை கவர்ந்துள்ளனர்.

 

இந்த வகையில் கடந்த 2 வருடத்தில் சன் நெட்வொர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அளித்த சலுகை கட்டணங்களால் இச்சந்தையில் வாடிக்கையாளர் அதிகளவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக ஸ்பைய் ஜெட் உருவெடுத்துள்ளது.

(Read: 6 reasons to partially sell shares and buy fixed deposits)

விமான போக்குவரத்து சந்தை

விமான போக்குவரத்து சந்தை

இந்திய சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுமார் 19 சதவீதம் வாடிக்கையாளர்களை கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்தியா வானில் பறக்க புதிய 6 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் இனி வரும் ஆண்டுகளில் இப்போட்டி கண்டிப்பாக அதிகமாகும்.

சலுகை..

சலுகை..

உள்நாட்டு விமான நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிப்பதில் முன்னோடியாக திகழும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் ஒன்று. மேலும் ஏர்ஏசியா தனது மலிவான விமானச்சேவையை இந்தியாவில் துவங்கிய முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் மார்கெட்டிங் சூத்திரங்கள் அதிகமானது.

மகிழ்ச்சியில் மக்கள்..
 

மகிழ்ச்சியில் மக்கள்..

இவர்களுடைய போட்டியில் மக்கள் குறைந்த விலையில் விமானப் பயணம் செய்ய முடிந்தது. மேலும் இந்தியாவில் விமான பயணத்தில் விலை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான எரிபொருளின் அதிகப்படியான விலை இதில் விலை மாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.

இண்டிகோ

இண்டிகோ

இண்டிகோ நிறுவனம் நிலையாக செயல்பட்டு வருவதால் இந்நிறுவனத்தின் வருமானம் மற்றும் தர வரிசையின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் இந்தியாவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதனால் இந்நிறுவனம் இச்சந்தையில் 15 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது.

மொத்த சேவை..

மொத்த சேவை..

ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான சேவை சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் இந்த விடுமுறை காலகட்டதில் போக்குவரத்து குறைந்ததை அடுத்து விமான போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Frequent fare discounts work their charm, SpiceJet becomes 2nd largest airline in India

Frequent fare discounts and marketing initiatives seem to be working for SpiceJet, which became the second largest domestic airline by passengers in June. It now holds sway over a fifth of the domestic market with over 19% share.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X