பெங்களுரூ: கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையாவின் மீது வருமான வரி துறையினர் வருமான வரி செலுத்தாத காரணத்திற்காக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
கடந்த 2009-10, 2010-11 மற்றும் 2011-12 ஆகிய நிதியாண்டுகளில் வருமான வரி செலுத்தாத காரணத்திற்காக வருமான வரித்துறையினர் விஜய் மல்லையா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் விசாரனையின் போது வியாழக்கிழமை அன்று சிறப்பு நிதிமன்றத்தின் முன் மல்லையா ஆஜரானார்.
ஜாமீன்
இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நிதிபதி முன்று வழக்கிற்கு ஜாமீன் வழங்கியது. மேலும் 1 இலட்ச ரூபாய் செலுத்தவும், முன்று வழக்கிற்கும் நிதி செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கவும் நிதிமன்றம் உத்தரவிட்டது.
வருமான வரித்துறை
இவ்வழக்கிற்கு முன் வருமான வரித்துறையின் அதிகாரியாண ஜீவன் ஜே நீரலங்கி கூறுகையில் இத்தகைய வழக்கிற்கு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. குறிப்பிடதக்கது.
இந்த பயல என்ன செய்யலாம்
வருமான வரித்துறை, வருமான வரிச் சட்டம் 1961, 131கீழ் வழக்கை பதிவு செய்துள்ளது, இதனால் மல்லையாவின் வருகை கட்டயாமானது. மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், இவர் வழக்கிற்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கமாட்டார் எனவும் கிங்பிஷர் நிறுவனத்தின் சொத்துக்களை விற்றுவிடுவார் எனவும் ஐடி துறை தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இவர் என்.ஆர்.ஐ ஆக இருப்பதால் இவர் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருகிறார், இதனால் வழக்கின் விசரனைக்கு இவரை பிடிப்பது மிகவும் கடினம் என வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
வரி நிலுவை
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 401 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும். வருமான வரி ஒரு பக்கம் இருந்தாலும் அவர் வாங்கிய 6,000 கோடி ரூபாய் கடனை எப்படி வசூல் செய்வது என்று புரியாமல் 16 வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்கள் தவிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications