ரூ.15,000 கோடி நஷ்டத்தில் பி.எஸ்.என்.எல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2013-14ஆம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லேண்டுலைன் சேவையில் மட்டும் சுமார் ரூ.14,979 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.7,085 கோடி என்பது குறிப்பிடதக்கது.

 

இந்நிறுவனம் மத்திய தொலைதொடர்பு மற்றும் ஐடி அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் அவர்களுக்கும் அளித்த பதில் கடிதத்தில் இந்த தகவலை பதவு செய்திருந்தது. மேலும் இந்த தொகை தணிக்கைக்கு முந்தைய அளவு எனவும் அதில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.

(Read: 4 fixed deposits with monthly interest income that retired individuals could invest)

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

இந்த பொது துறை நிறுவனம் கடந்த 2 நிதியாண்டுகளிலும் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது. 2012-13, 2011-12 ஆகிய நிதியாண்டுகளில் ரூ.7,884 கோடி மற்றும் ரூ.8,851 கோடி அளவில் தத்தம் நிதியாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்

மத்திய தொலைதொடர்பு மற்றும் ஐடி அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதியியல் புத்துயிர் பெற்றவும், பணியாட்டகளை சரியான அளவில் நியமிக்கவும் திட்டமிட்டு வருகிறார். இந்த திட்ட விடிவமைப்பிற்கு நிதியியல் திட்ட அறிக்கை மிகவும் முக்கிய பங்கு வகுக்கிறது.

வளர்ச்சிக்காக ஏங்கும் பி.எஸ்.என்.எல்

வளர்ச்சிக்காக ஏங்கும் பி.எஸ்.என்.எல்

இந்நிறுவனம் தனது லேண்டுலைன் சேவையை மேம்படுத்த பல வகையான திட்டங்களை தீட்டிவருகிறது. இதில் முக்கியமாக வாடிக்கையாளர் சேவை, விநியோகம், மற்றும் விற்பனை பிரிவில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

சேல்ஸ் ரெப்
 

சேல்ஸ் ரெப்

மேலும் இந்நிறுவனம் தனது விற்பனையை பெருக்க இந்தியா முழுவதும் சுமார் 4,500 சேல்ஸ் ரெப்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல் மீண்டும் சந்தையை கைபற்றும் என தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த சொத்து மதிப்பு

மொத்த சொத்து மதிப்பு

மார்ச் 31, 2014ஆம் ஆண்டின் தகவல் படி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,528.65 கோடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL suffered Rs 14,979 crore loss in 2013-14 in landline business

State-run BSNL suffered a loss of Rs 14,979 crore in landline services during 2013-14 whereas its net loss for the period stood at Rs 7,085 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X