ஆசிய சந்தைகள் கைகொடுத்ததால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தக துவக்கத்திலேயே சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து தொடர்ந்து உச்சத்தை பெற்று இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நாளை வெளிவர ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கை மற்றும் ஆகிய சந்தைகளில் வலுவான வர்த்தகம் தான்.

கடந்த 11 மாதங்களில் ரிசர்வ் வங்கி 5 முறை நிதியியல் கொள்கை வெளியிட்டுள்ளது இதில் 4 முறை பங்கு சந்தை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு முறை மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை தளுவியது. அதேபோல் இன்று பங்கு சந்தை மிகவும் சிறப்பாக 242 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.

(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)

நிதியியல் கொள்கை

நிதியியல் கொள்கை

இந்தியாவின் முக்கிய வங்கி அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடும் நிதியியல் கொள்கையில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிவித்தனர்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இன்று மும்பை பங்கு சந்தையில் 242 புள்ளிகள் உயர்ந்து 25723.16 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த வர்த்தகத்தில் அதிகப்படியாக 25,754.42 புள்ளிகளும், குறைவாக 25,531.38 புள்ளிகளை அடைந்துள்ளது.

லாபத்தை சந்தித்த நிறுவனங்கள்

லாபத்தை சந்தித்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் கிராம்டன் கிரீவ்ஸ், டைடன், அப்பல்லோ டையர்ஸ், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் அதிகாப்படியான லாபத்தை சந்தித்துள்ளது.

நஷ்டம் அடைந்தவர்கள்

நஷ்டம் அடைந்தவர்கள்

சிண்டிக்கேட் வங்கி, பைனான்சியல் டெக், பூஷன் ஸ்டீல், பிரட்டாணிய இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோ நெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து.

அதிகப்படியான வர்த்தகம்

அதிகப்படியான வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், மற்றும் எல் & டி ஆகிய நிறுவனங்களின பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex up 242 pts ahead of RBI policy; Infy lead

Equity benchmarks surged one percent on Monday ahead of RBI policy tomorrow, recouping more than half of Friday’s losses. The rupee also some recovery but it held 61-mark.
Story first published: Monday, August 4, 2014, 17:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X