கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா 8வது இடம்!! அமெரிக்கா முதல் இடம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய நாளில் இந்தியாவில் கோடீஸ்வர முகங்கள் ஆயிரக்கணக்கில் சர்வ சாதாராணமாக காணப்படுகின்றனர். உலகில் இன்றைய நிலவரப்படி பெரும் பணக்காரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏனெனில் இந்தியாவில் சுமார் 14,800 கோடீஸ்வரர்கள் இங்கு உள்ளனர்.

 

மேலும், இந்தியாவின் நிதித் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை அதிக அளவாக 2,700 கோடீஸ்வரர்களைக் கொண்டு, உலகின் 25 மிகப்பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்பட்டியலில் 15,400 பணக்காரர்களைக் கொண்டு ஹாங்காங் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியா உலக அளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், மும்பை உலகளவில் கோடீஸ்வரர்களைக் கொண்ட 30 நகரங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நகரம் எனப் பெயர் வாங்கியுள்ளது.

1.3 கோடி கோடீஸ்வரர்கள்

1.3 கோடி கோடீஸ்வரர்கள்

நியூ வேல்டு வெல்த் அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, உலகில் சுமார் 1.3 கோடி கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் (2014 ஜுன் நிலவரப்படி) இவற்றில் 4.95 லட்சம் பேரை பல கோடி ரூபாய்களுக்கு அதிபதிகளாக இருப்பதைக் காணலாம் எனவும் தெரிவிக்கிறது.

அளவீடுகள்

அளவீடுகள்

இந்த ஆய்வு, ஒரு கோடீஸ்வரர் எனப்படுபவர் பத்து லட்சம் டாலர்கள் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டவர்களாகவும், ஒரு கோடி டாலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்ட நபர்களை பல கோடிக்கு அதிபதிகளாகவும் கருதப்பட்டனர்.

டாப் 3 இடங்கள்
 

டாப் 3 இடங்கள்

பலகோடி ரூபாய்க்கு அதிபதிகளில் அமெரிக்கா மிக அதிகமாக 183,500 பேரைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சீனாவும் ஜெர்மனியும் முறையே 26,600 பேர் மற்றும் 25,400 பேர்களைக் கொண்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.

இந்தியா எட்டாவது இடம்

இந்தியா எட்டாவது இடம்

இந்த மூன்று நாடுகளைத் தவிர உலகின் பெரும் பணக்காரர்களைக் கொண்ட பட்டியலில், இங்கிலாந்து (21,700 பேர்), ஜப்பான் (21,000 பேர்), சுவிஸர்லாந்து (18,300 பேர்), ஹாங்காங் (15,400), இந்தியா (14,800 பேர்), ரஷ்யா (11,700 பேர்) மற்றும் ப்ரேசில் (10,300).

இந்தியா - சீனா

இந்தியா - சீனா

அமெரிக்க டாலர் அடிப்படையிலும் அமெரிக்கா சுமார் 41,05,000 கோடீஸ்வரர்களைக் கொண்டு முதலிடம் பிடித்தாலும் சீனாவும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கி முறையே 6,08,500 மற்றும் 2,26,800 கோடீஸ்வரர்களைக் கொண்டு ஐந்து மற்றும் பத்தாவது இடத்தையே பிடித்தன.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வின் முடிவில் கடந்த பத்தாண்டுகளில், உலகில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 2,700 people in Mumbai are worth more than Rs 60 crore

India is home to the eighth largest group of super rich people in the world, as there are as many as 14,800 multi-millionaires in the country, a report says.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X