இந்தியாவின் அன்னிய செலாவனி இருப்பு திடீர் வீழ்ச்சி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவின் அன்னிய செலாவனி இருப்பு கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி நிலவரப்படி சர்வதேச நாணய மதிப்புகள் குறைந்ததையடுத்து செலாவணிச் சொத்துகள் பெருமளவு குறைந்ததுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இருப்பில் 573.5 மில்லியன் டாலர்கள் குறைந்து 319.99 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் ரகுராம் ராஜன் உலக வர்த்தகத்தின் பலவீனத்தை உணர்ந்து, உலக நாடுகளை எச்சரித்தார்.

ஜுலை 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவனி சொத்துக்கள் உயர்ந்ததையடுத்து, கையிருப்பு 2.71 பில்லியன் டாலர் அதிகரித்து 320.56 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.

(READ: 6 extra financial benefits that senior citizens receive in India)

நாணயங்கள்

நாணயங்கள்

அமெரிக்க டாலர் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அன்னிய செலாவணிச் சொத்துக்கள், பௌண்ட், யூரோ மற்றும் யென் பிற நாடுகளின் செலாவணிகளில் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் விளைவுகளையும் உள்ளடக்கியது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஐ.எம்.எஃப்

ஐ.எம்.எஃப்

சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) இந்தியாவின் வைப்பானது 5.9 மில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்து 1.7 பில்லியன் டாலராக உள்ளது.

ட்ராயிங் ரைட்ஸ்

ட்ராயிங் ரைட்ஸ்

ஐ.எம்.எஃப் வங்கியில் இந்தியாவின் ஸ்பெஷல் ட்ராயிங் ரைட்ஸ் எனப்படும் சிறப்புப் பெறுகை உரிமை அளவும் 15.5 மில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்து 4.42 பில்லியன் டாலராக இருந்தது.

தங்க இருப்பு

தங்க இருப்பு

எனினும் தங்கத்தின் கையிருப்பு 538.9 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து 21.17 பில்லியன் டாலராக இருந்தது. ஜுலை 4 முதல் 25 ஆம் தேதி வரையிலான வாரங்களில் தங்கத்தின் கையிருப்பு 155.5 மில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்து 20.63 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's forex reserves down $573.5 million

India's foreign exchange reserves declined by $573.5 million to $319.99 billion due to a sharp fall in the currency assets for the week ended Aug 1, Reserve Bank of India (RBI) data showed. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X