அமெரிக்க தாக்குதலின் எதிரொலி: ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: எண்ணெய் வளம் மிகுந்த குர்திஷ் பகுதியில் இருந்த ஈராக் ரானுவத்தின் மீது அமெரிக்க விமான படைகள் தாக்குதலை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஆசிய சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

 

இன்றைய காலை வர்த்தகத்தில் செப்டமபர் மாதத்திற்கான அமெரிக்க பென்ச்மார்க் கச்சா எண்ணெயின் விலை 32 சென்டுகள் உயர்ந்து 97.97 டாலருக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 23 சென்டகள் உயர்ந்து 105.25 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் எண்ணெய் வளத்திற்காக பிற நாடுகளை நம்பி இருக்கும் இந்தியா போன்ற நாடுகள், இந்த விலை உயர்வு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.

(READ: 6 extra financial benefits that senior citizens receive in India)

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

"கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கிறார்கள், இதனால் குர்திஷ் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே முதலீட்டாளர்கள் அச்சம் கவலையின்றி எண்ணெய் வளத்தில் முதலீடு செய்யலாம்" என சிஎம்சி மார்கெட் நிறுவனத்தின் முதலீட்டு வள்ளுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்

தற்போது ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈராக்கின் மேற்கு மற்றும் வடக்கும் பகுதிகளை அதிகளவில் கைபற்றியுள்ளது. மேலும் இந்த பகுதிகளை இவ்வமைப்பு முன்னேற்றப் பகுதிகளாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

எண்ணெய் ஏற்றுமதி

எண்ணெய் ஏற்றுமதி

மேலும் ஈராக் அரசு எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்காமல் இருக்க கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் தற்காப்பு பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது. இதனால் பாக்தாத் பகுதியில் இருந்து பைப் வாயிலாக துருக்கிக்கும், தரைவழியாக ஜோர்டானுக்கும் எண்ணெய் ஏற்றுமதி பணிகள் எந்த வகையிலும் பாதிக்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 2.42 பீப்பாய் எண்ணெய்
 

2.42 பீப்பாய் எண்ணெய்

ஈராக்கின் எண்ணெய் அமைச்சகத்தின் தகவல் படி ஜூலை 24ஆம் தேதியின் வெளியிட்ட தகவலின் படி கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.42 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்மாத்தின் இலக்கும் 3.4 மில்லியன் பீப்பாய் என்பது குறிப்பிடதக்கது.

11% தேவையை பூர்த்தி செய்யும் ஈராக்

11% தேவையை பூர்த்தி செய்யும் ஈராக்

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உலகத்தின் எண்ணெய் தேவையில் 11 சதவீதத்தை பூர்த்தி செய்வதில் ஈராக் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் உலக சந்தையில் சிரியா மற்றும் லிபியா பிரச்சனைகளுக்கும் பிறகு எண்ணெய் ஏற்றுமதியில் ஈராக் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நாட்டின் வளத்தின் மீது குறிவைத்தே அமெரிக்கா இவர்களுக்கு ஒத்துஊதி வருகிறது. அமெரிக்காவின் சகுனி வேலைகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உட்பட பல நாடுகளில் துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices higher amid Iraq focus

Oil prices rose in Asia today as dealers monitor sustained US air strikes on extremist militants in Iraq who are threatening the crude-rich Kurdish region, analysts said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X