முகேஷ் அம்பானி நிறுவனத்திற்கு ரூ.13 கோடி அபராதம்!! செபி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு வாரியம் (செபி), கடந்த வெள்ளியன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு முக்கிய வருவாய் விகித விவரங்களை அளிக்காத காரணங்களுக்காக 13 கோடி ரூபாய் அபராதமாக விதித்தது.

 

2007 ஆண்டு வெளியடப்பட்ட பங்குகளை முன்கூட்டிய பங்கு முதலுடன் கலந்து அதனை பாதிக்கும் வகையில் அமைந்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் ஏறக்குறைய 6 காலாண்டுகளாக முக்கிய வருவாய் விகித விவரங்களை தராமல் இருந்துவிட்டது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(READ: 6 extra financial benefits that senior citizens receive in India)

செபி - ரிலையன்ஸ்

செபி - ரிலையன்ஸ்

மேலும், பட்டியல் ஒப்புகை மற்றும் பங்குமுதல் ஒப்பந்த (கட்டுப்பாடு) சட்டங்களின் சில பிரிவுகளை மீறும் வகையில், பங்குமுதலைக் கலந்ததன் மூலம் கிடைத்த பங்கின் மீதான வருவாய் விவரங்களை தரவில்லை எனக் குற்றம் சாட்டி செபி இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக ஆராயத் துவங்கியது. இந்த விவரம் அந்த அமைப்பின் பதினைந்து பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 காலாண்டு முடிவுகள்

6 காலாண்டு முடிவுகள்

பங்கு ஆணைகளை ரிலையன்ஸ் நிறுவனம் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தும், அவை பங்கு முதலாக 2008-09 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலேயே மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. டைல்லுடட் இயர்னிங்க்ஸ் எனப்படும் பங்குமுதலை கலப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயினை 2007 ஆம் ஆண்டின் ஜுன் மாதம் வரையிலான காலாண்டு, செப்டம்பர் வரையிலான காலாண்டு, டிசம்பர் வரையிலான காலாண்டு, 2008 ஆம் ஆண்டின் மார்ச் வரையிலான காலாண்டு, ஜூன் மாதம் வரையிலான காலாண்டு மற்றும் செப்டம்பர் வரையிலான காலாண்டு ஆகிய ஆறு காலாண்டுகளுக்கு பங்குச்சந்தைக்குத் தெரிவித்திருந்திருக்க வேண்டும்.

காலாண்டு நிதி அறிக்கை
 

காலாண்டு நிதி அறிக்கை

"எனினும், இந்த கால கட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கைகளை ஆராய்ந்ததில், இந்த விவரங்களை அந்த நிறுவனம் தெரிவிக்க வில்லை" என செபி தெரிவித்துள்ளது.

விதி மீறல்கள்

விதி மீறல்கள்

இந்த விதி மீறல்களுக்கான காரணங்களைக் கேட்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த வருட பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SEBI slaps Rs.13 crore fine on RIL

The Securities and Exchange Board of India (SEBI), on Friday, imposed a penalty of Rs.13 crore on Reliance Industries Ltd. (RIL) for non-disclosure of a key earnings ratio. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X