இந்திய ரயில்வே துறையின் புதிய "கோ-இந்தியா" ஸ்மார்ட்கார்டு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு புதிதாக "கான்டெக்ட் லெஸ் ஸ்மார்ட்கார்ட்" அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்கார்டையை பயன்படுத்தி, அனைத்து வித ரயில் பயணத்திற்கான கட்டண தொகையை செலுத்த முடியும். மேலும் இந்த கார்டை இந்தியாவில் எந்த ஒரு ரயில் நிலையத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரயில் துறையின் ஒரு சோதனை திட்டங்களுள் ஒன்று.

 

இத்திட்ட துவக்கத்தில் இந்தியாவில் இரண்டு பகுதிகளில் மட்டும் நிறுவப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு இந்தியாவில் மற்ற இடங்களுக்கும் அடுத்த கட்டங்களாக அமைக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

2 வழித்தடங்கள்

2 வழித்தடங்கள்

இத்திட்டத்தை டெல்லி முதல் ஹவுரா வழித்தடத்தில் உள்ள 6 ரயில் நிலையங்களான டெல்லி, கான்பூர், அலகாபாத், தன்பாத், கொல்கத்தா, ஹவுரா ஆகிய இடங்களிலும், 2வது வழித்தடமான டெல்லி முதல் மும்பை வரையில் உள்ள 6 ரயில் நிலையங்களிலும் இத்திட்டத்தை நிறுவ ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட்கார்டு

ஸ்மார்ட்கார்டு

திட்ட துவக்கத்தில் இந்த ஸ்மார்ட்கார்டு 70 ரூபாய்க்கு பயணிகளுக்கு கிடைக்கு கிடைக்கும். இதில் 20 ரூபாய் தொகையும் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. பின்பு இந்த கார்டுக்கு 20 ரூபாய், 50 ரூபாய் என 5000 வரை ரீசார்ஜ்செய்துகொள்ள முடியும். உச்சகட்டமாக இதி்ல் 10,000 ரூபாய் வரை ரீசார்ஜ்செய்துகொள்ள முடியும்.

பயன்பாடு

பயன்பாடு

இந்த ஸ்மார்ட்கார்டை யூடிஎஸ் கவுண்டர், தானியங்கி டிக்கெட் இயந்திரம் மற்றும் பிஆர்எஸ் கவுண்டரில் உபயோகப்படுத்த முடியும்.

கோ இந்தியா
 

கோ இந்தியா

இந்த கார்டின் பெயர் கோ இந்தியா, இந்த கார்டுக்கும் லைப்டைம் வேலிடிட்டி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways launches contact less smart card Go-India'

Indian Railways has launched a contact less smart card that can function across the country enabling passengers to pay for tickets for long distance reserved, unreserved, and suburban journeys as a pilot project.
Story first published: Wednesday, August 13, 2014, 18:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X