உலக வர்த்தக அமைப்பு: இறுதித் தீர்வை வேண்டி இந்தியா வலியுறுத்தல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பை பன்னாட்டு தேவைகளுக்கு ஒப்ப உறுதிசெய்யும் வகையில் உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக பயன்பாட்டு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தப் போவதில்லை என்ற தன் முடிவினை தெளிவுபடுத்தியது.

 

"இந்தியாவின் இந்த முடிவு, உணவு சேமிப்பை பொது உடைமையாக்கி அதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து மேலும் அதனை பன்னாட்டுக் கொள்கைகளுக்கு உடன்படும் வகையில் செய்வதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்" என வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவைக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

உணவு உற்பத்தி

உணவு உற்பத்தி

இந்தியாவின் கூற்றுப்படி, இது போன்ற ஒரு நிரந்தர தீர்வின்றி, இந்த பிரச்சினையில், பொது உணவு சேமிப்பு நடவடிக்கைகள், தற்போது நடைமுறையில் உள்ள உணவு உற்பத்தியில் 10 சதவிகித அளவிற்கான மானியங்களால் பாதிக்கப்படும். இது போன்ற விவசாயத்தின் மீதான மானியங்கள் தற்போதுள்ள உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி, வர்ததகத்திற்கு விரோதமான ஒன்றாகக் கருதப்படும்.

9வது உலக வர்த்தக அமைப்பு

9வது உலக வர்த்தக அமைப்பு

இந்தோனேஷியாவின் பாலித்தீவில் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒன்பதாவது உலக வர்த்தக அமைப்பின் நிர்வாக மாநாட்டின்போது இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வர்த்தக வசதிவாய்ப்பு மற்றும் விவசாயப் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தத்தை உள்ளடக்கிய ஒரு திட்டத்தினை ஏற்றுக்கொண்டன.

உணவுப் பாதுகாப்பு
 

உணவுப் பாதுகாப்பு

"வர்த்தக வசதி வாய்ப்பு ஒப்பந்தத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உணவுப் பாதுகாப்பிற்கான பொது உணவு சேமிப்பு மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பொது உணவு சேமிப்பு

பொது உணவு சேமிப்பு

இந்த வர்த்தக வசதிவாய்ப்பு ஒப்பந்தத்தினை இந்தியா ஏற்கப்போவதில்லை என்பதால், உணவுப் பாதுகாப்பு பிரச்சினையில் இந்தியா ஒரு காலக்கெடுவினைக் கொண்ட பொது உணவு சேமிப்புத் தொடர்பான தீர்வை எட்டத் தேவையான ஆலோசனைகளை பின்பற்றி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India wants final solution to food security issue in WTO

India on Wednesday clarified that its decision not to ratify WTO's Trade Facilitation Agreement (TFA) is aimed at ensuring that the country's efforts to ensure food security remain consistent with its international obligations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X