15% வளர்ச்சி.. 53.4 மில்லியன் வாடிக்கையாளர்கள்.. இந்திய இகாமர்ஸ் சந்தை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் இகாமர்ஸ் என்றழைக்கப்படும் ஆலைன் சில்லறை வர்த்தக துறையும் ஒன்று. இத்துறையின் வளர்ச்சி குறித்த ஒரு ஆய்வில் சில பல அதிர்ச்சி தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

 

இந்த ஆய்வின் முடிவில் கடந்த வருடத்தில் இருந்து சில்லறை விற்பனை பரிவுகளின் எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் பயணாளிகளின் எண்ணிக்கை 53.4 மில்லியன் என்ற அளவில் உயர்ந்துள்ளது, மொத்தமாக இத்துறை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பிடதக்கது.

(READ: 8 documents you must check before buying property in India)

12 வருட வளர்ச்சி

12 வருட வளர்ச்சி

அசோசாம் மற்றும் காம்ஸ்கோர் நிறுவனத்தின் ஆய்வில் இத்துறையின் வளர்ச்சியின் காரணமாக ஆடைகள், சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழுக சாதன பொருள்கள் விற்பனையில் கடந்த 12 வருடத்தில் இல்லாத வளர்ச்சியை கண்டுள்ளது. இதில் ஆடை விற்பனையில் 66 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.

சந்தையில் போட்டி

சந்தையில் போட்டி

இந்தியாவில் போட்டி இல்லாத துறை ஒன்றுக்கூட இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வகையில் இத்துறையில் பிளிப்கார்ட், ஜபாங், அமேசான் என பல நிறுவனங்கள் சந்தையை கைபற்ற குடுமிபிடி சண்டை போட்டு வருகிறது. இதில் பிளிப்கார்ட் நிறுவனம் ஜூலை மாதத்தில் சுமார் 26 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து ஜபாங் 23.5 மில்லியன் வாடிக்கையாளர்களும், அமேசான் 16.9 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது.

இதுமட்டும் அல்ல..
 

இதுமட்டும் அல்ல..

இகாமர்ஸ் சந்தையில் பொருட்கள் விற்பனை மட்டும் அல்லாமல் டிக்கெட் புக்கிங், விமான பயணங்கள், ஹோட்டல், மற்றும சுற்றுலா புக்கிங் போன்ர துறைகளும் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது என ஸ்டேட் ஆஃப் இகாமர்ஸ் இன் இந்தியா என்ற ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

டார்கெட்

டார்கெட்

இத்துறையில் அதிகம் பயன்படுத்துவேர் 15 முதல் 24 வயதுடையவர்கள் தான் என்பது இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த மற்றொரு தகவல். அதாவது அடுத்த தலைமுறை இந்தியா தொழிற்நுட்பத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது என்பதற்கு ஒரு சான்று இது, மேலும் 25 வயது மேற்பட்டவர்களுக்கு இத்துறையின் மீது நம்பகத்தன்மை குறைவாக உள்ளதையே இந்த வித்தியாசம் காட்டுகிறது. நிறுவனங்களும் 15 முதல் 24 வயதுடையவர்களை அதிகளவில் டார்கெட் செய்து விற்பனை செய்வதால் இவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Online retail category expands by 65 p.c.

With increasing number of people preferring to shop online, the retail category penetration has increased to 65 per cent and has grown to 53.4 million visitors a month, an overall growth of 15 per cent annually, according to a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X