மைக்ரோசாப்ட் வேணாம்.. பாஸ்கெட் பால் போதும்.. ஸ்டீவ் பால்மரின் புதிய வாழ்க்கை...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான (சிஇஒ) ஸ்டீவ் பால்மர் இந்நிறுவன இயக்குனர் குழுப் பதவியிலிருந்து விலகி, தான் புதிதாகத் தொடங்கியுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் கிளிப்பர்ஸ் கூடைப்பந்து அணியை கவனிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளார். இருப்பினும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தன் நான்கு சதவிகிதப் பங்குகளை தொடர்ந்து வைத்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார். "இந்த கிளிப்பர்ஸ் அணி, பொது சேவை, ஆசிரியர் பணி மற்றும் கல்வி ஆகியவை உள்ளடக்கிய என்னுடைய விருப்பங்களில் பெரும் பகுதியை கொண்டிருக்கும்" என மைக்ரோசாப்ட் நிறுவன தற்போதைய தலைவர் சத்யா நாதெல்லாவிற்கு எழுதிய கடிதத்தில் பால்மர் குறிப்பிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அந்த கடிதத்தை வெளியிட்டிருந்தது.

 

2 பில்லியன் டாலர்

2 பில்லியன் டாலர்

58 வயதான பால்மர், கிளிப்பர் அணிக்கு இரண்டு பில்லியன் டாலர் விலை கொடுத்துள்ளார். கடந்த திங்களன்று, பல்லாயிரக்கணக்காக திரண்ட ரசிகர்களை அந்த அணியின் வளாகமான ஸ்டேபுள்ஸ் செனட்டர் மையத்தில் வரவேற்ற அதே நேரம் மைக்ரோசாப்டின் ஆரவாரமான பணியாளர் சந்திப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

புல் ஸ்டாப் டூ மைக்ரோசாப்ட்

புல் ஸ்டாப் டூ மைக்ரோசாப்ட்

நிறுவனத்தில் அவரது வெளியேற்றத்தின் மூலமாக இந்த தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனத்துடன் அவர் கொண்டிருந்த 34 வருடத் தொடர்பை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஆரம்பக் காலம்
 

ஆரம்பக் காலம்

பால்மர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புறநகர் பகுதியான சீட்டில்ஸ் சிறியதாகத் தொடங்கிய பில்கேட்சின் இந்த நிறுவனத்தில் இணைந்து பின்னர் படிப்படியாக முன்னேறி 2000 ஆம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை நிறுவன தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

சத்ய நாதெல்லா

சத்ய நாதெல்லா

கடந்த 12 மாதங்களில் பல மாற்றங்களுக்குள்ளான இந்த 39 வருட மென்பொருள் நிறுவனத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அவரின் பழைய கம்பியுட்டர் விற்பனை கண்ணோட்டத்தில் இருந்து புதியதாக வந்துள்ள நாதேல்லாவின் புதிய கண்ணோட்டமான மொபைல் தொழில் நுட்பம் வித்தியாசமாக மாறுபடும் என்பதால், அவரின் இந்த முடிவு, இயக்குனர் குழுவில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும்.

நிலையற்ற தன்மை

நிலையற்ற தன்மை

இவரின் பணி விலகள் அறிவிப்பு, ஐந்து மாதங்களுக்கு நிறுவனத் தலைமையில் நிலையில்லாத தன்மை உருவாகியது. கடந்த பிப்ரவரியில் நாதெல்லா பதவில் வந்த பின்னர் நிறுவனத்தினழ் வளர்ச்சி திளைத்தது.

ஷேர் ஹோல்டர்..

ஷேர் ஹோல்டர்..

பில் கேட்ஸ் தன்னுடைய அறப்பணிகளுக்காக தன் பங்குகளை விற்றதால், பால்மர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மிகப்பெரும் பங்கு தாரராக உருவெடுத்தார். அவருடைய நான்கு சதவிகிதப் பங்கு சுமார் 15 பில்லியன் டாலர் பெறுமானமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Goodbye Microsoft: Ex-CEO Ballmer quits company board to focus on NBA team, teaching

Former Microsoft Corp Chief Executive Steve Ballmer has left the software company's board in order to spend more time on his newly acquired Los Angeles Clippers basketball team, but said he plans to hang on to his 4 percent stake in Microsoft.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X