வெறும் 600 ரூபாயில் விமான பயணம்!! ஏர்ஏசியாவின் புதிய சலுகை...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: விழா காலத்தை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நேற்று 1,888 ரூபாய் என்ற சலுகை விலையை அறிமுகம் செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு கடும் போட்டியாளராக இருக்கும் ஏர்ஏசியா நிறுவனம் வெறும் 600 ரூபாய் என்ற சலுகை விலையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான டிக்கெட்டை வரும் ஆகஸ்ட 31 வரை புக் செய்து கொள்ளலாம்.

 

ஒரு வருட காலம்

ஒரு வருட காலம்

ஏர்ஏசியா இணையத் தளத்தில் இந்த தள்ளுபடி விலையில் மார்ச் 1, 2015 முதல் 24 அக்டோபர் 201ஆம் காலகட்டத்தில் செய்யும் பயணத்திற்கு 600 ரூபாய் என்ற தள்ளுபடியை வழங்குகிறது. இதற்கான டிக்கெடை வரும் ஆகஸ்ட 31ஆம் தேதி வரையில் புக் செய்து கொள்ள முடியும்.

விலை..

விலை..

மேலும் இந்நிறுவனம் பெங்களுரில் இருந்து சென்னை மற்றும் கொச்சி நகரங்களுக்கு வெறும் 600 ரூபாயும், கோவா செல்ல 900 ரூபாய் என்ற கட்டணத்தையும் வசூல் செய்கிறது. மேலும் சண்டிகர் மற்றும் ஜெய்பூர் நகரங்களுக்கு 1,900 ரூபாய் என்ற கட்டணத்தில் விமான சேவை வழங்குகிறது.

நஷ்டம்
 

நஷ்டம்

இத்தகைய சலுகையை வழங்கும் இந்நிறுவனம் மாதம் 26 கோடி ரூபாய் நஷ்டத்தில் செய்படுவது குறிப்பிடதக்கது. ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டு சேவை அளித்து வருகிறது. மேலும் டாடா நிறுவனம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து புதிய பன்னாட்டு விமான சேவையை இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

சில வருடங்களுக்கும் முன் விமான போக்குவரத்து அதிகம் இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் கடந்த 2 -3 வருடங்களில் இந்தியாவிஸல் இருந்து விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகப்படியாக உள்ளது. இதனால் பிற நாட்டு விமான நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia India offers tickets at Rs 600

After SpiceJet launched its festive season sale offering tickets at Rs 1,888, the newest entrant into the low-cost carrier space AirAsia India is offering promotional fares starting at Rs 600 on advance tickets booked until 31 August.
Story first published: Tuesday, August 26, 2014, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X