"கையில காசு.. வாயில தோசை": நவ. 1 முதல் ஏடிஎம் பயன்பாட்டிற்கு அதிரடி கட்டுப்பாடு...!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நகர மக்களின் வங்கி ஏடிஎம் பயன்பாட்டில் ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் நகரவாசிகள் இனி ஏடிஎம் கார்டை கண்ணும் கருத்துமாக பயன்படுத்த வேண்டும்..

 

நவம்பர் 1, 2014 முதல் ஏடிஎம் பயன்பாடு, மினி ஸ்டேட்மென்டு, இதர சேவை முறைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான முறையில் இதனை பயன்படுத்தினால் நாம் அதிகளவில் பணத்தை இழக்க நேரிடும்... உங்களுக்கே தெரியும் வங்கியாளர்கள் பணத்தை எப்படி எடுப்பார்கள் என்று....

இதில் உஷார் இருப்பது எப்படி...

சொந்த வங்கியில் ஏடிஎம் பயன்பாடு

சொந்த வங்கியில் ஏடிஎம் பயன்பாடு

இப்போது உங்களின் வங்கி கணக்கி ஐசிஐசிஐ வங்கியில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்... இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இலவசமாக 5 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதர வங்கி ஏடிஎம்கள்..

இதர வங்கி ஏடிஎம்கள்..

அதேபோல் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏடிஎம்களை முன்று முறை மட்டும் இலவசமாக உபயோப்படுத்த முடியும். இந்தக் கட்டுப்பாடு மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மற்றும் ஹைதெராபாத் ஆகிய 6 முக்கிய நகரங்களில் மட்டுமே என்பதையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மீறினால் என்ன ஆகும்...
 

மீறினால் என்ன ஆகும்...

சொந்த வங்கியில் 5 முறை, இதர வங்கியில் 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் 20 ரூபாய் வரை வங்கி, கட்டணத்தை வசூல் செய்யும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கையில காசு.. வாயில தோசை...

கையில காசு.. வாயில தோசை...

சொந்த வங்கியில் 5 முறை பணம் எடுக்க முடியும்.. எனவே ஒரு வாரத்திற்கு தேவையான பணத்தை ஒரே முறையில் எடுத்து கொள்ளலாம். இப்பணத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம். இதன் மூலம் திருட்டுப்போவதை தடுக்கலாம்.

கணக்கு முக்கியம்...

கணக்கு முக்கியம்...

மேலும் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போது எத்தனை முறை பயன்படுத்தி உள்ளோம் என்பதை கணக்கு வைத்துக்கொண்டு 5 முறை பிறகு. இதர வங்கி ஏடிஎம்களில் 3 முறை பயன்படுத்தலாம்.

பேலன்ஸ் செக்கிங்...

பேலன்ஸ் செக்கிங்...

மேலும் உங்கள் கணக்கின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தாமல் ஆன்லைன் வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை, எஸ்.எம்.எஸ் வங்கிச் சேவை போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்...

பல வங்கிக் கணக்குகள்

பல வங்கிக் கணக்குகள்

நீங்கள் ஒரு மாதத்தில் 10 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தபவராக இருந்தால் 2 அல்லது 3 வங்கி கணக்கை வைத்துகொண்டு பணத்தை பரிமாற்றம் செய்து ஏடிஎம்-ஐ பயன்படுத்தலாம்.

நவம்பர் 1

நவம்பர் 1

மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் நவம்பர் 1 முதல் ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகள் அமல்படுத்த உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More ATM charges you have to pay in India from Nov 1, 2014

Beginning from November 1, 2014, you must limit the use of transactions like cash withdrawal, getting statement etc., from an ATM machine or else you may have to end-up paying charges.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X