கல் (கலாநிதி) கேபிள் நிறுவனத்தின் ஒளிப்பரப்பு உரிமம் ரத்து!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தென்இந்தியாவின் மிகப்பெரிய தொலைகாட்சி சாம்ராஜ்ஜியத்தை ஆளும் கலாநிதி மாறன்-க்குச் சொந்தமான "கல் கேபிள்ஸ்" (kal cabel) நிறுவனம் உள்பட இந்தியாவில் மொத்தம் 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமத்தை மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தில் மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

 

இது தொடர்பான விபரம் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம்

கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் மீது செக்யூரிட்டி கிளியரன்ஸ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவிக்காதது, நீதிமன்றங்களின் உத்தரவு உள்ளிட்ட சில காரணங்களால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை தெரிவித்துள்ளது.

உரிமம் ரத்து

உரிமம் ரத்து

இந்த உரிமம் ரத்தினால் தமிழகத்தில் பல பகுதிகளில் "கல் கேபிள்ஸ்" நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) மூலம் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சேனல்கள் நிலை கேள்விக்குரியாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு பிறகு இந்நிறுவனத்தின் சேவை இருக்காது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

கல் கேபிள்ஸ் நிறுவனத்தை போல தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் காவேரி டிஜிட்டல் நெட்வொர்க்ஸ் நிறுவனம், சென்னையை சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

புதிய நிறுவனங்கள்
 

புதிய நிறுவனங்கள்

இதற்கிடையில் மத்திய செய்தி மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் புதிதாக டிஜிட்டல் உரிமம் பெற்ற 111 நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டது. இப்பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 11 நிறுவனங்கள் உள்ளது, இதில் தமிழ்நாடு கேபிள் டிவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிற

வழக்கு

வழக்கு

சன் குழுமம் நடத்தி வரும் சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kal cables challenges licence cancellation

Union Information and Broadcasting Ministry has cancelled the provisional and permanent registration of Kal Cables Pvt Ltd., (part of Kalanithi Maran-headed Sun Group) on Wednesday.
Story first published: Thursday, August 28, 2014, 10:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X