சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களை கவணிக்க வங்கிகளுக்கு உத்திரவு!! நிதியமைச்சகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கறுப்பு பணத்தை கவனிப்பதற்கான சிறப்பு விசாரணைக் குழுவை (Special Investigation Team) உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதன் பின்னர், இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு முகவர்களுக்கு வழங்கப்படும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (Central Bureau of Investigation) எழுப்பியுள்ளது.

 

இதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு இந்திய நிறுவனங்களால் அந்நிய முகவர்களுக்கு வழங்கப்படும் பணத்தை கவனிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

நிதியமைச்கத்தின் நிதிச் சேவைகள் துறை, வங்கி அமைப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணம் அனைத்தையும் கவனித்து, சந்தேகத்திற்கிடமானவற்றை பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்கள் மற்றும் மின்துறைக்கான சாதனங்கள் குறித்த பரிமாற்றங்களை கவனிக்க வேண்டும் வங்கித் துறையில் உயர் பதவியில் உள்ள ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களை கவணிக்க வங்கிகளுக்கு உத்திரவு!! நிதியமைச்சகம்

மற்றொரு மூத்த அரசு அதிகாரியும் கூட இந்த கடிதம் அனுப்பப்பட்டதை உறுதி செய்தார், ஆனால் அவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை. 'அதிகமான விலையை குறிப்பிட்டுள்ளதாக ஐயம் ஏற்படுத்தும், சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களை நாங்கள் கண்டறிய முயற்சி செய்கிறோம்', என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார். எனினும், எதிர்காலத்தில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளை இப்பொழுதே சொல்வது, சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாதனங்களை இறக்குமதி செய்யும் போது அதிகமான விலையைக் குறிப்பிட்டு இந்தியாவின் கறுப்பு பணத்தை எளிதில் மறைத்து விட முடியும் என்று சிறப்பு விசாரணைக் குழு கடந்த வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிட்டுள்ளது.

இதன் படி செயற்கையாக கையாடல் செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.6000 கோடிகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடானி குழுமம் (Adani Group) அதிகமான விலையை குறிப்பிட்டதற்காக மத்திய புலனாய்வு நிறுவனத்தால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt wants banks to spot suspicious foreign deals

The government has put payments made by Indian companies to foreign vendors and routed through Indian banks under the scanner after the Supreme Court-appointed Special Investigation Team (SIT) on black money.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X