8,000 புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனை படைத்த நிஃப்டி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த இரு வாரக் காலத்தில் நிஃப்டி மற்றும் மும்பை பங்கு சந்தை தொடர்ந்து உயர்ந்து வந்தது, அதுமட்டும் அல்லாமல் கடந்த வாரம் மட்டும் மும்பை பங்கு சந்தை 3 முறை புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிட்டதக்கது.

 

இன்றைய வர்த்தக துவக்கத்தில் நிஃப்டி 8,000 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை படைத்ததுள்ளது. இதே தருணத்தில் மும்பை பங்கு சந்தை 26,820.37 புள்ளிகள் தொட்டுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் டாப் 50 இந்திய நிறுவனங்களின் குறியீடு தான் இந்த நிஃப்டி, மேலும் இத்தகைய நிறுவனங்களின் சிறப்பான வளர்ச்சி, வரிவாக்கம், முதலீடு ஆகியவற்றின் காரணமாக இச்சந்தை சிறப்பான வளர்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் நிஃப்டி 47.15 புள்ளி உயர்வுடன் 8001.50 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

நிஃப்டி சந்தையை போலவே மும்பை பங்கு சந்தையும் 182.26 புள்ளிகள் வரை உயர்ந்து 26,820.37 புள்ளிகள் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

ஜிடிபி

ஜிடிபி

மேலும் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2 வருடத்தில் உயர்வான வளர்ச்சி. புதிய அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அன்னிய முதலீட்டுக்கான அளவீடுகளை உயர்த்தல் ஆகியவற்றின் காரணமாக 5.7% என்ற உயர்வை எட்டுயுள்ளது.

அன்னிய முதலீடு
 

அன்னிய முதலீடு

இந்திய சந்தையில் அன்னிய முதலீடு தொடரந்து அதிகரித்து வந்தாலும், கடந்த வாரம் இறுதியில் 801 மில்லியன் டாலர் குறைந்துள்ளது. மேலும் பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்ய சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty may scale 8000 on strong foreign inflows, growth numbers

The Nifty may scale 8000 levels this week on the back of strong foreign fund flows and better-than-expected first quarter GDP numbers.
Story first published: Monday, September 1, 2014, 10:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X