பொருளாதார போட்டியில் இந்தியாவிற்கு 71வது இடம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் போட்டியாளர்கள் பட்டியலில் இந்தியா 71வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதார மந்த நிலை காரணமாக 60வது இடத்திலிருந்து இப்போது 71வது இடத்திற்குச் சறுக்கியுள்ளது. ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகப் பொருளாதார அமைப்பான WEF ஆண்டுதோறும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ஸ்விட்சர்லாந்துக்கு முதலிடம்

ஸ்விட்சர்லாந்துக்கு முதலிடம்

இந்த ஆண்டிற்கான பட்டியலை WEF நேற்று வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கருப்பு பணத்தை புதைத்து கொண்டிருக்கும் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

சறுக்கிய இந்தியா

சறுக்கிய இந்தியா

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 60வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 71வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை
 

பொருளாதார மந்த நிலை

கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலை காரணமாகவே உலக அளவில் இந்தியா இப்படிச் சறுக்கியுள்ளது. ஆனாலும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மோடி அரசு உறுதியளித்துள்ளது. கடந்த 2009 முதலே இந்தியாவின் பொருளாதாரம் 8.5 சதவீதத்திலிருந்து சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டே வந்த போதிலும், WEF பட்டியலில் அந்த ஆண்டிலிருந்து சறுக்கிக் கொண்டேதான் வருகிறது.

சிங்கப்பூர் நம்பர் 2

சிங்கப்பூர் நம்பர் 2

WEF பட்டியலில் சிங்கப்பூர் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. ஃபின்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஹாங்காங், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

 53வது இடத்தில் ரஷ்யா

53வது இடத்தில் ரஷ்யா

WEF பட்டியலில் ரஷ்யா 53வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 56வது இடத்திலும், மற்றும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளன.

சீனாவுக்கு 28வது இடம்

சீனாவுக்கு 28வது இடம்

இந்தப் பட்டியலில் சீனா ஒரு இடம் முன்னேறி 28வது இடத்தைப் பிடித்துள்ளது. 'பிரிக்ஸ்' (BRICS) நாடுகளைப் பொறுத்தவரை சீனா இந்தப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் உள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதையும் இந்தப் பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India slips to 71st rank in global competitiveness list

Weighed down by challenging economic conditions for most part of the past year, India has slipped to 71st position - the lowest among BRICS countries - in an annual global competitiveness list, with Switzerland claiming the top spot.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X