குவாலியர்: வங்கியில் 30 வருடமாக பதவி உயர்வு ஏதுமில்லாமல் பியூனாக மட்டும் பணியாற்றி சுமார் 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளார் ஒருவர். மத்திய பிரதேசத்தில் உள்ள மாநில அரசின் ஒரு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவ் நூதன முறையில் சொத்துகளை சேர்த்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஒருவர் மொட்டை கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தை வைத்து வருவாய் துறை அதிகாரிகள் குல்தீப் வீட்டை சோதனையிட்டபோது, அவருக்கு ஆறு பங்களாக்கள், இரண்டு சொகுசு கார்கள், ஏராளமான நகைகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததுள்ளது.
நாள் முழுவதும் சோதனை
வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை முழுக்க குல்தீப் வீட்டில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் கைபற்றினர். 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வங்கி பியூன் எப்படி 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்க்க முடியும் என அதிர்ந்து போயினர்
சொத்து விபரங்கள்
சோதனையில் வருவாய் துறையினருக்கு இரண்டு அடுக்கு வீடு, 5 பெரிய வீடுகளுக்கான பத்திரங்கள், 2 செகுசு கார்கள், பணம், கிலோ கணக்கில் நகைகள், 4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டங்கள், நிலம் மற்றும் வங்கி லாக்கருக்கான ஆவணங்கள் கைபற்றியுள்ளது.
மதிப்பீடு
குல்தீப் யாதவ் சம்பளத்தை ஒப்பிடும் போது இவரது சொத்து மதிப்பு சுமார் 200 சதவீதம் அதிகமானது என இச்சோதனையில் ஈடுப்பட்ட சுரேந்திரா ராய் ஷர்மா தெரிவித்தார். (ஐடியிலும், உற்பத்தி துறையிலும் ராத்திரி பகல் என்று பார்க்காமல் உழைக்கும் பலருக்கு மாத கடைசியில் நாக்கு தள்ளுகிறது... இவர் அழகாக 7 கோடி சம்பாதித்து விட்டார்... பலே குல்தீப் பலே..)
வருவாய் துறையினரின் கணக்கு
மாநில அரசு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவிற்கு 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருக்காது. ஆகையால் இத்தனை வருடத்தில் 20 லட்சத்திற்கு மேல் இவரால் சொத்துகளை சேர்ந்து இருக்க முடியாது என வருவாய் துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
வழக்கு
இதையடுத்து, அவர் சட்டத்திற்கு புறப்பாக செயல்களில் ஈடுப்பட்டும், லஞ்சம் வாங்கியதாகவும் குல்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications