மருத்துவ தொழிற்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் காக்னிசன்ட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனங்களுக்கும் கடும் போட்டியை அளித்து வரும் காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவின் மருத்துவ தொழிற்நுட்ப மற்றும் செயல்பாட்டு நிறுவனமான டிரைஜெட்டோ நிறுவனம் 2.7 பில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.

 

இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 245,000 நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களுக்கு எங்களது சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ துறை

மருத்துவ துறை

இன்றைய மருத்துவத்துறை தொழிற்நுட்ப வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான செலவுகள் மற்றும் கட்டண வித்தியாசங்கள் ஆகும். இத்தருணத்தில் டிரைஜெட்டோ நிறுவனத்துடன் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டிசோசா தெரிவித்தார்.

டிரைஜெட்டோ (TriZetto)

டிரைஜெட்டோ (TriZetto)

இந்த இணைப்பின் மூலம் டிரைஜெட்டோ நிறுவனத்தின் 3700 பணியாள்ரகள் இனி சி.டி.எஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளனர். சி.டி.எஸ் நிறுவனத்தின் மருத்துவ பிரிவில் சுமார் 200 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

பண பரிமாற்றம்

பண பரிமாற்றம்

இந்த ஒப்பந்தத்திற்கான தொகையை காக்னிசன்ட் 1 பில்லியன் டாலரை ஹாட் கேஷ் ஆகவும், மீதமுள்ளதை கடனாகவும் டிரைஜெட்டோ நிறுவனத்திற்கு செலுத்த உள்ளது.

வருவாய்
 

வருவாய்

2013ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 8.843189 பல்லியன் டாலர் வருவாயாக பெற்றது குறிப்பிடதக்கது. இந்நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நிறுவனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant to acquire US-based Trizetto for about $2.7 billion

Cognizant on Monday announced that it will acquire US-based healthcare technology & operations company Trizetto for about $2.7 billion in cash. 
Story first published: Monday, September 15, 2014, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X