ஹெச்.எம்.டி வாட்சு நிறுவனத்தை இழுத்து மூட திட்டம்!! மத்திய அரசு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 90களில் இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய நிறுவனம் ஹெச்.எம்.டி. இந்நிறுவனத்தின் கைகடிகாரங்கள் மக்கள் மத்தியில் நீங்க இடம் பெற்றிருக்கும். உலகமயமாக்கல் பிறகு இந்தியாவில் ரோலக்ஸ், ரேடோ, மற்றும் இதர முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் இறங்கியதால் இந்நிறுவனத்தின் மதிப்பும் மரியாதையும் குறைந்தது.

 

கடந்த பத்து வருடமாக இந்நிறுவனம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்தது, இதனால் கனரக உற்பத்தி மற்றும் பொது நிறுவன துறை இந்நிறுவனத்தை மூடிவிட திட்டமிட்டுள்ளனர்.

ஒப்புதல்

ஒப்புதல்

ஹெச்.எம்.டி வாட்ச் மற்றும் ஹெச்.எம்.டி சீனார் வாட்ச் நிறுவனங்களை மூட மத்திய அரசு திட்டமிட்டதை அடுத்து இதற்கான அறிக்கையை பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்கும் அமைப்பிடம் வளங்கியது. இந்த அறிக்கைக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஹெச்.எம்.டி

ஹெச்.எம்.டி

இந்நிறுவனத்தின் விரிவாக்கம் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் லிமிடெட், இந்தியாவில் வாட்ச் தயாரிப்பை 1961ஆம் இந்திய அரசு வாட்ச்மேக்ர் சிட்டிசன் ஆஃப் ஜப்பான் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் குவாடஸ் வாட்சுகளை தயாரித்தது.

துவக்கத்தில் கலக்கல்..

துவக்கத்தில் கலக்கல்..

மேலும் இந்நிறுவனம் 1961ஆம் ஆண்டு நிறுவனத்தை துவங்கி, 1970களில் உற்பத்தியை துவங்கியது. பின்பு 1987களில் இந்நிறுவனம் தனக்கே உரியதான் மெக்கானிக்கல் தொழிற்நூட்ப வாட்சுகளை உருவாக்கியது குறிப்பிட்டதக்கது. இதுவரை சுமார் 115 மில்லியன் வாட்சுகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

பணியாளர்கள்
 

பணியாளர்கள்

இந்நிறுவனத்தில் இதவரை சுமார் 1,105 பணியாளர்கள் உள்ளனர், இவர்களின் நிலைமை தற்போது கேள்விகுறியாகி உள்ளது.

தொடர் நஷ்டம்..

தொடர் நஷ்டம்..

இந்நிறுவனத்தின் விற்பனை குறைந்ததால் கடந்த 10 வருடமாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. குறிப்பாக 2012-3ஆம் ஆணடில் 242.47 கோடி ரூபாய் நஷ்டம், 2011-12ஆம் ஆண்டில் 224.04 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இத்தகைய நிலைக்கு யார் காரணம்?? மக்கள் ஆகிய நாம் தான்..

பன்னாட்டு பொருட்கள்

பன்னாட்டு பொருட்கள்

இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பிறகு பன்னாட்டு தயாரிப்புகள் இந்தியாவில் குவிந்தது, இதில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் கார், பைக் வரை குவிந்தது. இதனால் மக்களுக்கு அதன் மீதான மோகத்தால் வெளிநாட்டு பொருட்களை அதிகளவில் வாங்க துவங்கியதன் மூலம் நாட்டில் இந்தியா பொருட்களுக்கு மதிப்பு குறைந்தது.

மேடு இன் இந்தியா

மேடு இன் இந்தியா

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ஹெச்.எம்.டி, ராய்ல் என்பீல்டு போன்ற நிறுவனங்கள் தான். இந்த நிலைமையை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய உற்பத்தி பொருட்களை இந்தியாவிலும், உலக நாடுகளில் மேம்படுத்தபடுத்த பட்ட முறையில் சந்தைபடுத்த திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின் பெயர் தான் "மேடு இன் இந்தியா"

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HMT loses race against time, to be shut soon

HMT Watches, the iconic brand that evokes nostalgia in most Indians, will be shutting shop soon.
Story first published: Monday, September 15, 2014, 11:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X