குறைவான செலவில் சிறப்பான சேவை அளிக்கும் டாப் 10 வங்கிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு சிறந்த வங்கி என்பது புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கும், அவர்களது வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் புதுமையான விஷயங்களை பின்பற்றும் நிறுவனமாகும். அதேநேரம், பணத்தை சேமிப்பவர்களும், பில் செலுத்துபவர்களும் அவர்களுக்கு ஏற்படும் செலவை சற்று உன்னிப்பாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், வாடிக்கையாளர்களின் விமர்சனங்களிலிருந்து ஒரு வங்கிக்கு கிடைக்கக்கூடிய ஒரு பரந்த அங்கீகாரமே ஒரு வங்கியை சிறப்பானதாக ஆக்குகிறது. இருப்பினும், வங்கிக்கு வங்கி, இடத்திற்கு இடம் வங்கிக் கட்டணங்கள் பெரியளவில் மாறுபடுகின்றன, ஆனால், சிஎன்பிசியின் தொகுப்பின் படி, பின்வரும் இந்த 10 வங்கிகள் உலகிலே செலவு குறைந்த வங்கிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

சிட்டி பேங்க்
 

சிட்டி பேங்க்

பன்னாட்டு சிட்டிகுரூப்பின் நுகர்வோர் நிதிச் சேவைப் பிரிவு சிட்டி பேங்க் ஆகும். 1812ஆம் ஆண்டு சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க் ஆக நிறுவப்பட்டது. இன்று, 36 நாடுகளில் 3,777 கிளைகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு வங்கியாகும்.

யு.எஸ்.ஏ.ஏ

யு.எஸ்.ஏ.ஏ

ஐக்கிய சேவைகள் ஆட்டோமொமைல் கூட்டமைப்பு (யுஎஸ்ஏஏ) என்பது, டெக்சாஸ் அடிப்படையிலான பல்வேறு ராணுவ வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனமாகும், இது அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் மக்கள் மற்றும் குடுபங்களுக்கு சேவைகளை வழங்குகிறது. ஒருவருக்கு ஒருவர் சுய-காப்பீடு வழங்குவதற்காக, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழுவால் 1922 இல் யு.எஸ்.ஏ.ஏ நிறுவப்பட்டது. இந்த வங்கி வாடிக்கையாளர் திருப்திப்படுத்துவதில் பரந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

கேப்பிட்டல் ஒன்

கேப்பிட்டல் ஒன்

கேப்பிட்டல் ஒன் நிதி நிறுவனமானது, ஒரு அமெரிக்க வங்கியியல் நிறுவனமாகும், இது பணப்பற்றாகுறையுள்ள வாடிக்கையாளர் (cash-strapped customers) சேவையில் சிறப்பு வாய்ந்ததாகும். மொத்த சொத்து மற்றும் வைப்புகள் அடிப்படையில், கேப்பிட்டல் ஒன், அமெரிக்காவில் எட்டாவது மிகப்பெரிய வங்கியியல் நிறுவனமாகும்.

 சேன்டான்டர்
 

சேன்டான்டர்

1857 இல் ஸ்பெயினில் நிறுவப்பட்டது, சேன்டான்டர் ஸ்பெயினின் வங்கி குழுவில் ஒன்றாகும், சந்தை முதலீட்டு அடிப்படையில் யூரோ மண்டலத்தில் இது மிகப்பெரிய வங்கியாகும். இதற்கு 186,000 ற்கும் அதிகமான பணியாளர்கள், 14,392 கிளைகள், 3.26 மில்லியன் பங்குதாரர்கள் மற்றும் 102 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏப்ரல் 2013ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் குளோபல் 2000, உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இது 43வது இடத்தைப் பெற்றது.

ஆர்பிஎஸ் சிட்டிசன்ஸ்

ஆர்பிஎஸ் சிட்டிசன்ஸ்

சிட்டிசன்ஸ் ஃபைனான்சியல் குரூப் இங்கிலாந்திற்குச் சொந்தமான ஒரு அமெரிக்க வங்கி தான் இந்த ஆர்பிஎஸ் சிட்டிசன்ஸ். 2014ஆம் ஆண்டில், சிட்டிசன்ஸ் ஃபைனான்சியல் குரூப், அமெரிக்காவின் 12வது மிகப்பெரிய வங்கியாகும். இன்றைய தேதியில், சிட்டிசன்ஸ் ஃபைனான்சியல் குரூப் 18,400 ஊழியர்களைக் கொண்ட ஒரு $127 பில்லியன் வர்த்தக வங்கி நிறுவனமாகும்.

யூனியன் வங்கி

யூனியன் வங்கி

யூனியன் வங்கியானது , காலிஃபோர்னியா, வாஷிங்டன் மற்றும் ஆரிகான் ஆகிய இடங்களில் 398 கிளைகளைக் கொண்ட ஒரு அமெரிக்க முழு-நேர வங்கியாகும். இது டோக்கியோ-மிட்ஸ்சுபிஷி வங்கிக்கு சொந்தமான நிறுவனமாகும். 5 சுற்றாய்வுப் பிரிவுகள் அனைத்திலும், யூனியன் வங்கி முதல் 10வது இடத்தில் உள்ளது.

காமெரிக்கா (Comerica)

காமெரிக்கா (Comerica)

காமெரிக்கா, மிச்சிகான், டெட்ராயிட்டில் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமாகும். தற்போது இதன் தலைமையகம் டெக்சாஸ், டால்லஸில் உள்ளது.

அமெரிக்காவின் 25 மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும், ஜூன் 30, 2014 வரை, இதன் மொத்த சொத்து $62.9 பில்லியன், மொத்தக் கடன் $44.8 பில்லியன் மற்றும் மொத்த வைப்பு $51.4 பில்லியன் ஆகும்.

சன் ட்ரஸ்ட்

சன் ட்ரஸ்ட்

சன் ட்ரஸ்ட் ஒரு அமெரிக்க வங்கி நிதி நிறுவனமாகும், 1985 இல் நிறுவப்பட்டது. அமெரிக்க தெற்கு மாநிலங்களில், 1497 கிளைகளையும், 2243 ஏடிஎம் மையங்களையும் கொண்டு சன் ட்ரஸ்ட் இயங்கி வருகிறது.

எம் & டி வங்கி

எம் & டி வங்கி

எம் & டி ஒரு அமெரிக்க வர்த்தக வங்கியாகும், இது வடக்கு நியூயார்க் மாநிலத்தில் 1856 இல் நிறுவப்பட்டது.1970 பிற்பகுதியில் இருந்து, ஒவ்வொரு காலண்டும் லாபம் ஈட்டி வரும் ஒரு நிறுவனம் எம் & டி ஆகும். 2008 மற்றும் 2009 நிதி நெருக்கடியில், எஸ்&பி 500 இல், பங்கிலாபத்தை குறைக்காத இரண்டு வங்கிகளில் எம்&டி ஒன்றாகும்.

ஃபிப்த்-தேர்ட் பேங்க் (Fifth-Third Bank)

ஃபிப்த்-தேர்ட் பேங்க் (Fifth-Third Bank)

சின்சின்னடியில் தலைமையகத்தைக் கொண்ட, ஒரு அமெரிக்க பிராந்திய வங்கி நிறுவனம் ஃபிப்த்-தேர்ட் ஆகும். பணப்பற்றாக்குறை வங்கி வாடிக்கையாளருக்கான முதல் 10வது இடத்தைப் பிடித்த நிறுவனம் இதுவாகும், ஆனால், வாலட் ஹப் பட்டியலில் ஒவ்வொரு பிரிவிலும் கீழ்மட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Least Expensive Banks For Your Money

A good bank is one that innovates to attract new customers and encourage growth. But at the same time making it important for savers and bill-payers to compare closely what costs they may face.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more