வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி அளிக்கும் 9 வங்கிகள்!! உண்மையிலே அதிகம் தான் பாஸ்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பாதுகாப்பான முதலீடு என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது வங்கி வைப்பு நிதிகள் தான். இதர முதலீட்டு திட்டங்களை விட வங்கி வைப்பு நிதியில் வட்டி வகிதம் குறைவாக இருந்தாலும், பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் இந்திய மக்கள் அதிக முதலீடு செய்யும் திட்டம் வைப்பு நிதிகள் தான்.

 

ஆனால் தற்போது வங்கி வைப்புகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பாரத ஸ்டேட் வங்கி உள்பட பெரும்பாலான வங்கிகள் அண்மையில் நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

இந்நிலையிலும் குறு மற்றும் நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு தொடர்ந்து அதிக வட்டி விகிதம் வழங்கும் 9 பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

(கமர்கட்டும் விமான பயணமும்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய சலுகை...)

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி

366 நாட்கள் முதல் 730 நாட்கள் வைப்புக் காலம் கொண்ட நிலையான வைப்புகள் மீது 9.25 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. பிரபல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்தியில், வைப்புகள் மீது மிக உயர்ந்த வட்டி விகிதம் வழங்குவது ஐஎன்ஜி வைஸ்யா வங்கி ஆகும். மூத்த குடிமக்களுக்கு (சீனியர் சிட்டிசன்) இந்த வங்கியில் 9.75 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

யெஸ் பாங்க்

யெஸ் பாங்க்

எட்டு மாதம் எட்டு நாட்கள் வைப்புக்காலம் கொண்ட வைப்புகளுக்கு யெஸ் பாங்க் 9.10 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்குகிறது. நாட்டின் பெயர் பெற்ற தனியார் வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் இதுவே மிக உயர்ந்த வட்டி விகிதம் ஆகும்.

கார்ப்பரேஷன் வங்கி
 

கார்ப்பரேஷன் வங்கி

3 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் 3 மாதகால வைப்புகளுக்கு, கார்ப்பரேஷன் வங்கி 9.11 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. இது ஏனைய பொதுத்துறை வங்கிகளை விட சிறப்பான வட்டி விகிதம் ஆகும். இதர முதற்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு இந்த வங்கி சுமார் 9 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

யூகோ வங்கி (UCO BANK)

யூகோ வங்கி (UCO BANK)

யூகோ வங்கியில், ஒரு ஆண்டுகால வைப்புகளுக்கு 9.10 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. வருடாந்திர ஈட்டம் 9.41 சதவிகிதம் வரை கிடைக்கும், இது மிகவும் சிறப்பான விகிதமாகும்.

 பாங்க் ஆஃப் இந்தியா

பாங்க் ஆஃப் இந்தியா

14 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரையான வைப்புகளுக்கு பாங்க் ஆஃப் இந்தியா 9.05 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் இதன் சக வங்கிகளை ஒத்தது மற்றும் நாட்டின் பெரிய வங்கிகளை விட இது உயர்வான விகிதமாகும்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியில் 5 ஆண்டுகால வைப்புக்கான வட்டி விகிதம் 9.05 சதவிகிதம் ஆகும். 500 நாட்கள் வைப்புகள் மீதான வட்டி விகிதம் 9.2 சதவிகிதமாக இருந்தது, ஆனால், அண்மையில் இந்த வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது குறிப்பிடதக்கது.

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கியில் ஒரு ஆண்டுகால வைப்புக்கான வட்டி விகிதம் 9.05 சதவிகிதம். காலாண்டு கூட்டு வட்டிவிகித ஈட்டம் 9.36 சதவிகிதம் வரையாகும். 2 முதல் 3 ஆண்டுகால வைப்பு மீதான வட்டி விகிதமும் 9.05 சதவிகிதம் ஆகும், ஆனால் இதன் ஈட்டம் 9.80 சதவிகிதம் வரையாகும்.

விஜயா வங்கி

விஜயா வங்கி

ஒரு வருடகால வைப்பு நிதிகளுக்கு விஜயா வங்கி 9.05 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. வைப்புத்தொகை 5 முதல் 10 கோடிகள் வரை இருந்தால் வட்டி விகிதம் சற்று உயர்வாகும், அதாவது 9.10 சதவிகிதம் ஆகும்.

அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கி

1 முதல் 2 ஆண்டு காலம் மற்றும் 2 முதல் 3 ஆண்டு கால உள்நாட்டு வைப்புகள் மீது அலகாபாத் வங்கி 9 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 bank deposits that offer you the highest interest rates in India

Interest rates on bank deposits are falling. Most of the banks including the likes of State Bank of India have recently cut interest rates. Take a look at 9 bank deposits that are still offering the highest interest. We have taken only the popular private and public sector banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X