டாப் அதிகாரிகளுக்கு ரூ.5 கோடி சம்பள உயர்வு!! பயம் கலந்த அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனம், விஷால் சிக்காவின் நியமனத்திற்கு பிறகு பல மாற்றங்களை சந்தித்து வருகிறது இதில் இந்த மாற்றம் தான் டாப்பு டக்கர் என்று இன்போசிஸ் ஊழியர்கள் வட்டார்ங்கள் தெரிவிக்கிறது. இந்நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் (executive vice-president's) அனைவருக்கும் 1 மில்லியன் டாலர் அதாவது, வருடத்திற்கு 6 கோடி ரூபாய் என்ற அளவில் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இணையான சம்பளம் என்பது குறிப்பிடதக்கது.

 

இத்தகைய சம்பள உயர்வினால் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது குறையும், அதேபோல் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் என இன்போசிஸ் நிர்வாக் குழு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இச்சுற்றில் 6 கோடி ரூபாய் சம்பள உயர்வு பெற்ற உயர் அதிகரிகள் அனைவருக்கும் இதற்கு முன் 1.2-2 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. சுமார் 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

தங்கத்திலான கைவிலங்கு

தங்கத்திலான கைவிலங்கு

சம்பள உயர்வு பற்றி இன்போசிஸ் நிறுவன ஊழியர்களிடம் கேட்ட போது, பெயர் வெளியிட விரும்பாத ஒரு உயர் மட்ட அதிகாரி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக சம்பள அளித்தாலும், இது ஒரு தங்கத்திலான கைவிலங்கு என்றபடியே நாங்கள் பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இன்போசிஸ் அதிகாரிகள்
 

இன்போசிஸ் அதிகாரிகள்

இந்த திடீர் சம்பள உயவர்வால் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் பயம் கலந்த மகிழ்ச்சியுடனே உள்ளனர். மேலும் தற்போது இவர்களது நிர்வாக பொறுப்புகள் அதிகரிக்கும், வேலை பளு அதிகரிக்கும் என விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இன்போசிஸ் நிறுவனத்திற்கு என்ன லாபம்

இன்போசிஸ் நிறுவனத்திற்கு என்ன லாபம்

1. இந்தியாவின் இதர முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
2. சந்தையில் போட்டியை அதிகரிக்க முடியும்.
3. நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் திறன் மிக்க தயாரிப்புகள் வெளிவரும்.
4. பன்னாநாட்டு நிறுவனங்களுக்கும் இணையான அந்தஸ்து. இன்னும் பல...

ஸ்ரீனிவாஸ் மற்றும் சுரேஸ் வஸ்வானி

ஸ்ரீனிவாஸ் மற்றும் சுரேஸ் வஸ்வானி

விஷால் சிக்கா நியமனத்திற்கு முன்பு வெளியேறிய பி.ஜி.ஸ்ரீனிவாஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரியான சுரேஸ் வஸ்வானி ஆகியோர் இந்திய நிறுவனங்களில் 1 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று வந்தது குறிப்பிடதக்கது. தற்போது ஸ்ரீனிவாஸ் ஹாங்காங் நாட்டின் டெலிகாம் மற்றும் மீடியா நிறுவனமான பி.சி.சி.டபள்யு நிறுவனத்தின் சீஇஓ-வாக பணியாற்றி வருகிறார். அதேபோல் சுரேஸ் வஸ்வானி தற்போது டெல் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys brings executive VPs into $1 million salary club

Infosys has raised the salaries of its top executives so sharply that some of them are now in the $1-million (Rs 6-crore) compensation club, making them almost unreachable by even international rivals, and raising the salary benchmark in the Indian IT industry.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X