மின்னணு வர்த்தகத்தில் டாடா, ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா நுழைகிறது!! அலிபாபாவின் தாக்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இணையதள சில்லறை வர்த்தகத்தில் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்துள்ள தனிப்பட்ட முதலீடுகள்மற்றும் அதன் வர்த்தகத்தின் வளர்ச்சி கண்ட டாடா நிறுவனம் இதன் மீதனா ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டாடா நிறுவனம் மின்னணு வர்த்தகத்துறையில் ஒரு மிகப்பெரும் துவக்கத்தை செய்யத் தூண்டியுள்ளதாகத் தெரிகிறது.

 

டாடா குழுமத்தின் அங்கமான மின்னணுக் சாதனங்களை விற்கும் க்ரோமா போன்ற நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கவில்லை. எனவே டாடா குழுமம் இந்த புதிய திட்டத்தினை சிரமெடுத்து புதிய வர்த்தகத்துறைகளில் இறங்கவுள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

சந்தையில் இறங்குவது உறுதி

சந்தையில் இறங்குவது உறுதி

இப்புதிய திட்டத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிற வர்த்தகர்களும் டாடா நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தை மேற்கொள்வர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வர்த்தகர்களை பதிவு செய்யும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும், பணியாளர்களும் இதற்காக தேர்வு செய்யப்படுவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

க்ரோமா மற்றும் ஸ்டார் பஜார்

க்ரோமா மற்றும் ஸ்டார் பஜார்

இத்திட்ட துவக்கத்தில் டாடா குழும மட்டுமே இடம் பெறும், அதாவது க்ரோமா மற்றும் ஸ்டார் பஜார் ஆகியவை மட்டும் இறங்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் தன் கூட்டாளியான ஃபேஷன் ப்ராண்டான ஜாரா-வையும் இந்த வர்த்தகத்தில் சேர்த்துக் கொள்ளவுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஜாரா நிறுவனம்
 

ஜாரா நிறுவனம்

ஜாரா நிறுவனம் தற்போது தன்னுடைய பொருட்களை, தனக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே பல நாடுகளில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் சொந்தமான ஒரு மின்னணு வர்த்தகத்தைத் தொடங்க இந்திய சட்டங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதால், டாடாவுடன் இணைவதற்கு அந்த நிறுவனம் சம்மதிப்பதால் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

அலிபாபா-வின் தாக்கம்

அலிபாபா-வின் தாக்கம்

இணையதள சந்தை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ள டாடா, அதன் கவுரவத் தலைவரான ரத்தன் டாடா தன் சொந்த முதலீடாக ஸ்னாப்டீல், ப்ளூஸ்டோன் (நகை விற்பனை நிறுவனம்) போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

ஸ்னாப்டீல் நிறுவனம்

ஸ்னாப்டீல் நிறுவனம்

ஸ்னாப்டீல் நிறுவனம் தன் சந்தை சார்ந்த இணைய தளத்தின் மூலமாக பொருட்களை அலிபாபாவின் பாணியை பின்பற்றி விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே டாடா குழும நிறுவனங்களான டாடா ஹவுசிங் மற்றும் க்ரோமா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் பொருட்களை விற்பனை செய்துவருகிறது.

ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா

ரிலையன்ஸ், ஆதித்யா பிர்லா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமங்கள் ஏற்கனவே மின்னணு வர்த்தகத்தில் நுழைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. எனினும் ஒரு உறுதியான திட்டத்தை இன்னும் தெரிவிக்கவில்லை. ஃப்யுச்சர் க்ரூப் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இந்த முயற்சிகளில் முதலில் தோல்வியடைந்து மறுபடியும் இதில் அடியெடுத்துவைக்க முயன்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Alibaba effect? Tata Group to enter e-tail, may rope in Zara too

The multiple investments made by its chairman emeritus Ratan Tata in e-tail seems to have inspired the Tata Group too which is now reportedly planning a big bang entry into the ecommerce space with a marketplace-based model.
Story first published: Thursday, September 25, 2014, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X