32 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறும் ரூ.1000 ஒய்வூதிய திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் 1995-ம் ஆண்டின் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1000/- ஆக மாற்றம் செய்வதாக அரசு எடுத்த முடிவின் மூலம் கிட்டத்தட்ட 32 இலட்சம் பேர் உடனடியாக பலனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

முன்னதாக, இந்நிறுவனத்தின் அறிக்கையின் படி தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் வாயிலாக 28 இலட்சத்திற்கும் குறைவானவர்களே ரூ.1000/-க்கும் குறைவாக மாத ஒய்வூதியம் பெறவார்கள் என்று பரிந்துரை செய்திருந்தது.

ஓய்வூதியம் திட்டம்

ஓய்வூதியம் திட்டம்

தொழிலாளர் ஓய்வூதியம் திட்டம் - 95-ன் கீழ் பலனடைந்து வரும் 49 இலட்சம் ஓய்வூதியதாரர்களில் 32 இலட்சம் பேர் ரூ.1000/-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்களில் பெருமளவிலானவர்கள் ரூ.500/-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்' என்று தொழிலாளர் சேம நிதி நிறுவனத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதம் ரூ.1000 ஒய்வுதியம்

மாதம் ரூ.1000 ஒய்வுதியம்

செம்டம்பர் 1-ல் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 95ன் கீழ் வழங்கப்பட்ட சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்த மாதத்தில் இருந்து ரூ.1000/-க்கும் குறைவாக பெறுபவர்கள் இதைப் பெற ஆவண செய்யப்பட்டுள்ளது.

செம்டம்பர் 30

செம்டம்பர் 30

இந்த செயல்பாட்டை மேலும் நினைவு கூறச் செய்யும் வகையில், செம்டம்பர் 30ம் தேதியன்று கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை நடத்துமாறு தொழிலாளர் சேம நிதி நிறுவனம் அதன் கள அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

விழிப்புணர்வு
 

விழிப்புணர்வு

மேலும் இதுகுறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் சமூக பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கள அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO's Rs. 1,000 Minimum Pension to Benefit 32 Lakh Immediately

Government's decision to amend the Employees Pension Scheme, 1995 (EPS-95) run by EPFO to provide minimum monthly pension of Rs. 1,000 will immediately benefit around 32 lakh pensioners who get less than this.
Story first published: Friday, September 26, 2014, 10:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X