நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தடை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மின் உற்பத்தியில் பெரும் பகுதி உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரியை மட்டுமே நம்பி செயல்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு, வழங்கப்பட்ட எல்லா உரிமங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யதுள்ளது.

 

இதில் தப்பித்தது வெறும் 4 உரிமங்கள் மட்டும் தான், இதில் 2 ரிலையன்ஸ் நிறுவனத்துடையது, மற்ற 2 உரிமங்கள் மத்திய அரசின் என்டிபிசி மற்றும் எஸ்.எ.ஐ.எல் நிறுவனங்களுடையது.

மின் உற்பத்தியில் பின்னடைவு

மின் உற்பத்தியில் பின்னடைவு

இத்தகைய தடையால் நாட்டின் மின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும், இதன் எதிரொலியாக தான் தமிழ்நாட்டில் மீண்டும் மின் வெட்டு அமலுக்கு வந்ததுள்ளது. மேலும் நீதிமன்றத்தின் இத்தடை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகவும், நாட்டின் உற்பத்தியில் கடுமையாக பாதிப்பு உண்டாகும் என தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்கம்

நிலக்கரி சுரங்கம்

இந்தியாவில் மொத்தம் 42 நிலக்கரி சுரங்கம் உள்ளது, இச்சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை உற்பத்தி செய்ய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுமார் 218 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக 214 உரிமங்களுக்கு ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

உற்பத்தி தடை
 

உற்பத்தி தடை

இந்திய மின் உற்பத்தி நிலைங்களுக்கு தேவையான நிலக்கரி 53 மில்லியன் டன் இந்திய சுரங்கத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் உற்பத்தி நிலையங்களுக்கும் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 80 மில்லியன் டன் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இதனால் நாட்டின் முதுகெழுப்பு போன்று இருக்கும் நிலக்கரியை சார்ந்த துறைகளான பவர், ஸ்டீல் மற்றும் சுரங்கத்துறைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாம், இதானல் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர தன்மை சீர்குழையும்.

நிறுவனங்களின் நிலை

நிறுவனங்களின் நிலை

உச்ச நீதிமன்றத்தில் தடைவிதித்த அடுத்த சில மணிநேரங்களில் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மள மளவென சரிந்தது. அதிகப்பிடயாக ஜிந்தால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 10 சதவீதம் சரிந்தது.

அபராதம்

அபராதம்

தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, தாங்கள் இதுவரை எடுக்கப்பட்ட நிலக்கரிக்கு ஆபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றனம், ஒரு டன் நிலக்கரிக்கு 295 ரூபாய். அபராதம் செலுத்துவதற்கு நிறுவனங்களுக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Supreme Court Cancels 214 Coal Blocks; Metal Stocks Crash

Shares in companies that have spent crores in developing coal mines crashed on Wednesday after the Supreme Court cancelled all but four coal blocks allocated since 1993. The court let off two coal blocks operated by Reliance Power and one each by state-run NTPC and SAIL as they are associated with Ultra Mega Power Projects (UMPP).
Story first published: Friday, September 26, 2014, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X