தமிழ்நாட்டை குறிவைக்கும் ஆன்லைன் ஜாம்பவான்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: தற்போது இந்தியாவில் அதிகளவில் பார்க்கப்படும் இணைதளங்களில் கூகிள், பேஸ்புக், டிவிட்டர் தவிற முன்னிலையில் இருப்பது ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களின் இணையதளங்கள் தான். அதுவும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் அதிரடி ஆஃபர் அனைத்தும் மக்களை கிறங்கடித்துள்ளது.

 

இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களும் தமிழகத்தை குறிவைத்துள்ளது. எதற்கு??

சென்னை தான் டார்கெட்

சென்னை தான் டார்கெட்

சில்லறை விற்பனை சந்தையில் கொடிகட்டி பறக்கும் இந்நிறுவனங்கள், தென் இந்தியாவில் தனது விநியோகத்தை எளிமை செய்ய சென்னையில் ஒரு மிகப்பெரிய கிடங்குகளை அமைக்க தயாராகி வருகிறது.

கிடங்குகள் அமைக்க இடம் ரெடி

கிடங்குகள் அமைக்க இடம் ரெடி

தென் இந்தியாவை துறைமுகத்துடன் இணைக்கும் ஒரு நகரம் சென்னை. சென்னையில் இருந்து கேரள, பெங்களுரூ மற்றும் அந்திரா பிரதேசம் ஆகிய. மாநிலங்களை எளிதாக பொருட்களை கொண்டு சேர்க்க முடியும். இதன் காரணமாக இந்நிறுவனங்கள் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ரெட் ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் கிடங்கள் அமைக்க இடம் சேர்வு செய்யப்பட உள்ளது.

2015 முதல் துவக்கம்
 

2015 முதல் துவக்கம்

இக்கிடங்குகளில் இருந்து விநியோகம் 2015ஆம் ஆண்டு மத்தியில் இருந்து துவங்கும் என இருநிறுவனங்களும் தெரிவித்துள்ளது. மேலும் இருநிறுவனங்களுக்கும் கிடங்குகளை அமைக்க உதவி செய்து வருவது ஜோஸ் லாங் லாசேலி என்ற நிறுவனம் தான்.

முதலீடு

முதலீடு

பிளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன் முதலீடாக 1 பில்லியன் டாலர் பெற்றது. இதன் கண்ட அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜேப் பிசோஸ் அமெசான் நிறுவனத்தின் இந்திய கிளையில் பிளிக்கார்ட் நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிகமான முதலீடு அதாவது 2 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தார்.

இந்தியா வருகை

இந்தியா வருகை

இந்த முதலீட்டுக்கான வழிமுறையை துவங்க இந்தியாவிற்கு வந்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜேப் பிசோஸ் அவர்கள் கூறுகையில் "இந்தியாவில் எங்களது முன்னேற்றத்திற்கான தடைகள் எதுமில்லை, 2 பில்லியன் டாலர் முதலீட்டுடன் இந்தியாலில் எங்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், சந்தையை கைபற்றவும் எளிதாக முடியும். மேலும் அலிபாபா நிறுவனத்தின் இந்திய வருகை எங்களுக்கு சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது."

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart, Amazon in scramble for land in T.N.

Flipkart and Amazon are now aggressively evaluating space for setting up warehouses in South India, and Chennai seems to be their preferred destination. Interestingly, both the online firms have identified land at same locations – Sriperumbudur and Red Hills. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X