அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் கலக்காலாக 5 இந்தியர்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சில நாட்களுக்கு முன்பு தான் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்தார். தற்போது இந்நிறுவனம் அமெரிக்காவின் 400 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இப்பட்டியலில் கடந்த 21 வருடமாக முதல் இடத்திலேயே உள்ளர் ஒருவர். அவர்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். மேலும் இப்பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

அமெரிக்காவில் பல இந்தியர்கள் வெற்றிகரமாக தொழில் துவங்கி சாத்தித்து வருகின்றனர். இதில் சில பேர் இத்தகைய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வரும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். இவர்களை பற்றி இங்கு காண்போம்

பாரத் தேசாய்

பாரத் தேசாய்

அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டல் நிறுவனத்தின் தலைவர் பாரத் தேசாய் இப்பட்டியலில் இவர் பிடித்துள்ள இடம் 255 இவருடைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்.

ஜான் கபூர்

ஜான் கபூர்

இல்லினாய்ஸ் மாகானத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜான் கபூர் இப்பட்டியலில் பிடித்துள்ள இடம் 261, இருடைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்.

சிம்பொனி டெக்னாலஜி
 

சிம்பொனி டெக்னாலஜி

அமெரிக்காவில் சிம்பொனி டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோமேஷ் வத்வானி அவர்கள் பிடித்துள்ள இடம் 264, இவருடைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்.

ஏஞ்சல் இன்வெஸ்டார்

ஏஞ்சல் இன்வெஸ்டார்

முதலீட்டு நிறுவனமான சிலிக்கான் வேலி ஏஞ்சல் இன்வெஸ்டார் நிறுவனத்தின் தலைவரான ராம் ஸ்ரீராம் 1.87 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 350வது இடத்தில் உள்ளார்.

வினோத் கோசலா

வினோத் கோசலா

கோசலா இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர் 1.67 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 381 இடத்தில் உள்ளார்.

டாப் 5

டாப் 5

இப்பெரும் பட்டியலில் ஒரு இந்தியார் இருந்தால் கூட நாம் பெருமையில் உச்சத்தில் இருந்திருப்போம். ஆனால் இதில் 5 இந்தியார்கள் உள்ளது நமக்கும் மிகவும் பெருமையான தகவல். மேலும் இப்பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்திருப்பவர்களை பார்போம்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ் தனது பொறுப்புகளை சத்ய நாடெல்லாவிடம் பத்திரமாக கொடுத்து விட்டு சமுக சேவையில் இறங்கியுள்ளார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்து வருகிறார்.

தற்போது இவர் 81.2 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

உலகில் உள்ள அத்தனை முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த புத்தகமாக விளங்கும் வாரன் பஃபெட் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை பில் கேட்ஸ் அவர்களை போலவே மக்களுக்கு செலவு செய்து வருகிறார்.

இப்பட்டியலில் 67.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.

ஆரகிள் லேரி எலிசன்

ஆரகிள் லேரி எலிசன்

ஆரகிள் நிறுவனத்தின் சீஇஓ-வாக இருந்து சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய லேரி எலிசன் 48.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார்.

கோச் சகோதரர்கள்

கோச் சகோதரர்கள்

அமெரிக்காவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை போலவே பல்துறை நிறுவனமான கோச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான சார்லஸ் கோச், டேவிட் கோச் ஆகியோர் இப்பட்டியில் 42.9 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளனர்.

வால்மார்ட் குடும்பம்

வால்மார்ட் குடும்பம்

அமெரிக்காவில் சில்லறை வர்த்தகத்தின் ஜாம்பவான் என போற்றப்படும் வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர்களான கிரிஸ்டி வால்டன் (38.1 பில்லியன் டாலர் ), ஜிம் வால்டன் (36.4 பில்லியன் டாலர் ), ஆலிஸ் வால்டன் (35 பில்லியன் டாலர் ), ராப்சன் வால்டன் (35 பில்லியன் டாலர் ) ஆகியோர் 6,7,8,9 இடங்களை பிடித்தனர்.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் (30 வயது) இப்பட்டியலில் 34.8 பில்லயன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார். மேலும் இப்பட்டியலில் குறைந்த வயதில் இடம்பெற்ற பணக்காரர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five Indian-Americans in Forbes list of US' richest

Five Indian-Americans have been named among the 400 richest people in the US by Forbes, a list topped by Microsoft co-founder Bill Gates for the 21st year in a row with a net worth of $81 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X