ரிசர்வ் வங்கியின் பண கொள்கையில் மாற்றம் இல்லை!! ரகுராம் ராஜன் அறிவிப்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் செவ்வாய் கிழமை காலை இருமாத நிதியியல் கொள்கையை வெளியிட்டார். கடந்த முறையும் வட்டி விகித்தில் மாற்றம் எதும் செய்யாமால் அறிவித்த ரகுராம் ராஜன், இம்முறை வட்டி வகிதங்கள் கண்டிப்பாக உயர்த்தப்படும் என பல வங்கி நிர்வாகிகள் மற்றும் நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

 

ஆனால் நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இம்முறையும் ரகுராம் ராஜன் வட்டி வகிதத்தில் மாற்றம் எதும் செய்யாமல் அறிவித்தார்.

வட்டி வகிதம்

வட்டி வகிதம்

ரகுராம் ராஜன் வெளியிட்ட நிதியியல் கொள்கைகளின் படி ரெப்போ ரேட் 8 சதவீதமும், ரிவிர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 7 சதவீதம் என்று அறிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

மேலும் நாட்டின் பணவீக்கம் ஜனவரி 2016ஆம் ஆண்டுக்குள் 6 சதவீதம் என்ற அளவில் குறைக்க வேண்டும் எனஅறிவித்தார். இதன் படி வருகிற ஜனவரி 2015ஆம் ஆண்டுக்குள் நுகர்வோர் பணவீக்கம் 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய குறிக்குகோள் என ராஜன் தெரிவித்தார்.

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி

தற்போது பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் விலை குறைந்து வருவதாலும், உலக வர்த்தக சந்தைகள் ஸ்திர தன்மையை அடைந்துள்ளதாலும் பணவீக்கத்தின் அளவு விரைவில் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

உணவு பொருட்களின் விலை
 

உணவு பொருட்களின் விலை

பருவமழை பொய்த்தன் காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்தது இதனால் நாட்டின் நுகர்வோர் பணவீக்கும் 10 சதவீதம் வரை எட்டி தற்போது 9 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது நுகர்வோர் பணவீக்கம் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு தனிந்துள்ளது.

பங்குசந்தை

பங்குசந்தை

மும்பை பங்கு சந்தை இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சரிவில் துவங்கியது, ரிசர்வ் வங்கி கொள்ளகை வெளியிட்டுக்கு பின்பு சுமார் 80 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதே போல் நிஃப்டியும் 35 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

அரவிந்த மாயாராம்

அரவிந்த மாயாராம்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தில் இருப்பதாலும் ரகுராம் ராஜன் நிதியியல் கொள்கை குறித்து நிதித்துறை செயலாளர் அரவிந்த மாயாராம் அவர்களிடம் கலந்து ஆலோசித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI keeps rates unchanged, says 6% inflation target by 2016 still a risk

The central bank kept the repo rate unchanged at 8 percent while the reverse repo rate also stays at 7 percent.
Story first published: Tuesday, September 30, 2014, 11:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X