பிளிப்கார்ட் மக்கள் மத்தியில் "பிளாப்கார்ட்" ஆனது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் முக்கிய நகரங்கள், சாப்ட்வேர் பணியாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் நேற்று ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் "பிக் பில்லியன் டே"வின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.

 

எதற்காக பிக் பில்லியன் டே??

எதற்காக பிக் பில்லியன் டே??

வாடிக்கையாளர்களை கவரவும், அமேசான் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை சமாளிக்கவும், அலிபாபா நிறுவனத்தின் இந்திய சந்தை முயற்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே.

அது என்ன பிக் பில்லியன் டே??

அது என்ன பிக் பில்லியன் டே??

இந்த சொல்லுக்கு உண்மையான அர்த்தம், பிளிப்கார்ட் நிறுவன பொருட்களுக்கு பில்லியன் ஆஃபர்கள் என்று பலரும் நினைத்துள்ளனர், ஆனால் உண்மையில் இது 10 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை ஒரே நாளில் எட்டும் எண்ணத்துடனே இப்பெயர் வைத்துள்ளது இந்த பன்சால் கூட்டணி.

பிக் பில்லியன் டே
 

பிக் பில்லியன் டே

இந்நாளில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 70 பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கு 1ரூபாயில் இருந்து 90 சதவீதம் வரை விலையில் சலுகையை அள்ளிவிசியுள்ளது. இந்நாளில் மட்டும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 10,000 பணியாளர்கள் 12 நேரம் வேலை செய்தனர்.

6-10

6-10

பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவரும் பெங்களுரில் நிறுவனத்தை துவங்கும் போது 6-10 என விட்டில் தான் துவங்கினர். அதனை கருத்தில் கொண்டே இந்நிறுவனம் 6ஆம் தேதி 10 மாதமான நேற்று இந்த பிக் பில்லியன் டே திட்டத்தை துவக்கியுள்ளது.

தொழிற்நுட்ப கோளாறு

தொழிற்நுட்ப கோளாறு

இத்திட்டத்திற்காக முக்கிய நகரங்கள் முழுவதும் விளம்பரம் செய்த இந்நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை சமாளிக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை இதனால் இத்தளம் பல மணிநேரம் முடங்கியது. வாடிக்கையாளர் கடுப்பாகினர்.

சோல்டு அவுட்

சோல்டு அவுட்

பொருட்களை வெளியிட்ட சில மணிநேரங்களில் பொருட்கள் விற்று தீர்ந்துப்போனது இதனால் வெறுப்படைந்த மக்கள் சமுக வலைதளங்களில் தங்களது கடுமையான மற்றும் நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்தனர். இதனால் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் பக்கம் அதிகாப்படியான வாடிக்கையாளர்கள் தரும்பினர்.

விற்பனை

விற்பனை

பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் இரு நிறுவனங்களும் நேற்று 600 கோடி ரூபாய் மதிப்பிலான வரத்தகத்தையே செய்தன. இதில் ஸ்னாப்டீல் எந்த விதிமான சிறப்பு சலுகைகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து ஸ்னாப்டீல் கூறுகையில், வருடத்தில் பிற நாட்களை போலவே தான் நேற்றைய தினமும் இருந்ததது, ஆனால் விற்பனையில் புதிய உயர்வை சந்தித்தோம் என்று கூறினர்.

பேஸ்புக், டிவிட்டர்

பேஸ்புக், டிவிட்டர்

சமுக வலைதளங்களில் மக்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தை பிளாப்கார்ட், பேக்காரட் என hashtagகுகளை பிறப்பினர், அதேபோல் ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு சாதகமாகவும் hashtagகுகளை பிறப்பினர்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிக் பில்லியன் டே மூலம் மக்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது இருந்த நம்பிக்கை இழந்ததுள்ளது.

மொபைல் விற்பனை

மொபைல் விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தை மட்டுமே நம்பி இந்தியாவில் களம் இறங்கியுள்ள சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி கடந்த 2 மாதத்தில் சுமார் 3 இலட்சம் மொபைல் போன்களை விற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart's biggest sale disappoints most online shoppers

By the time India's largest discount sale by Flipkart got over by Monday evening, most online shoppers were flipped out with disappointment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X