பி.எஃப் கணக்குகளின் இணைய சேவையில் தரம் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ஊழியர் சேமநல நிதி அமைப்பில் (EPFO) சுமார் 4 கோடி மக்கள் தங்களின் சேமநல கணக்கை இனி நிகழ் நேரத்தில், ஆதாவது வங்கி கணக்குகளை போல் உடனுக்குடன் கணக்கின் முழு தகவலையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த பிரத்தியேக வலைதளத்தை வரும் அக்டோபர் 16ஆம் நாள் துவங்க உள்ளது.

 

மேலும் இத்தளத்தை அமைப்பதன் மூலம் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை கொண்டு நிறுவனங்கள் முறையாக தங்களின் சேமநல நிதி கணக்கில் பணம் செலுத்தி வருகிறதா என்பதை சரிபார்க்க முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் 16ஆம் நாள் துவங்க உள்ளார், இதன் மூலம் முதற்கட்டமாக அனைத்து கணக்காளர்களும் இத்தளத்தை பயண்படுத்தும் படி அமைக்கப்படும், பின்பு சில மாதங்களில் கணக்காளர்களின் நிறுவன மாற்றங்களுக்கும் ஏற்றவாறு கணக்கு மாற்றும்படி அமைக்கப்படும்.

பேப்பர் லெஸ் சர்வீஸ்

பேப்பர் லெஸ் சர்வீஸ்

அது மட்டுமின்றி, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு கணக்காளர் மாறுகிறபோது, தங்களது சேமநல கணக்கினைப் புதிய நிறுவனத்துக்கு மாற்றுமாறு விண்ணப்பிக்கவும் தேவை இல்லை. அதுவும் ஆன்லைன் மூலமே மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்
 

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்

மேலும் ஒய்வுதியம் பெறும் அனைவருக்கும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் அளிக்கும் பணி இவ்வமைப்பு கடந்த ஜூலை மாதம் முடித்தது. இவ்வமைப்பு சுமார் 4 கோடிக்கும் அதிகமான யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்களை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கிறது.

தகுதியானவர்கள்

தகுதியானவர்கள்

ஒய்வுதியம் மற்றும் சேமநல நிதி கணக்கு கொண்ட 4.18 கோடி பணியாளர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள 4.3 இலட்சம் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

தகவல் சேகரிப்பு

தகவல் சேகரிப்பு

தற்போதைய நிலவரப்படி ஒய்வுதிய அமைப்பு 2.04 கோடி பணியாளர்களின் வங்கி கணக்கு, 92.94 இலட்சம் பணியாளர்களின் பான் எண் மற்றும் 35.4 இலட்ச பணியாளர்களின் ஆதார் எண் தகவல்களை சேகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PF Subscribers to Get Real Time Account Updates From October16

Over four crore subscribers of the Employees' Provident Fund Organisation (EPFO) would be able to access their PF accounts online on real time basis using a dedicated members' web portal from October 16.
Story first published: Tuesday, October 7, 2014, 15:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X