நவம்பர் 1 முதல் சென்னை தொழிற்சாலை மூட திட்டம்!! நோக்கியா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகளவில் மொபைல் தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நோக்கிய நிறுவனம் நிலைகுழைந்து போனது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்நிறுவனம் சென்னையில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை வரும் நவம்பர் 1ஆம் தேதி முழுமையாக மூடுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்நிறுவனத்தின் உளகளாவிய மொபைல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய நிலையில், சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலையின் மீது உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வரி நிலுவை வழக்கின் காரணமாக கைபற்ற முடியவில்லை, இதனால் இத்தொழிற்சாலை தற்போது நோக்கியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது நோக்கியா இந்தியா தொழிளாலர் சங்கம் வி.ஆர்.எஸ் பெறாத 900 பணியாளர்களின் நிலையை நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நிலையில் நிறுவனத்தை மூட கூடாது என சென்னை உயர் நீதிமன்றனத்தில் வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளது.

(5000 பணியாளர்களுக்கு டா டா காட்டும் ஹெச்.பி நிறுவனத்தின் புதிய திட்டம்!!)(5000 பணியாளர்களுக்கு டா டா காட்டும் ஹெச்.பி நிறுவனத்தின் புதிய திட்டம்!!)

நவம்பர் 1

நவம்பர் 1

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சில மாதங்களுக்கு வி.ஆர்.எஸ் வழங்கிய இந்நிறுவனம் தற்போது உற்பத்தியை முழுமையாக நிறுத்த உள்ளது. இத்தொழிற்சாலையை கடந்த ஜனவரி மாதம் 2006ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

தொழிற்சலையை மூடுவதற்கு என்ன காரணம்

தொழிற்சலையை மூடுவதற்கு என்ன காரணம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கைபற்றிய நிலையில் தனது மொபைல் உற்பத்தியை பெருக்க சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு ஆர்டர் கொடுப்பதை மைக்ரோசாப்ட் குறைந்துக்கொண்டது. இதன் காரணமாகவே உற்பத்தி தடைப்பட்டு தொழிற்சாலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

சென்னையில் இருந்து இந்நிறுவனம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இந்த ஏற்றுமதியில் சுமார் 2,400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு நீதிமன்றம் 3,500 தமிழக அரசிற்கு செலுத்தி விட்டு நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்களாம் என தீர்ப்பு அளித்தது.

நிறுவன கைமாற்றம்

நிறுவன கைமாற்றம்

வரி ஏய்ப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், நோக்கியா நிறுவனம் தனது மொபைல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சுமார் 7.2 பில்லியன் டாலருக்கு விற்றுள்ளது.

பிரமாற்றத்தில் தடை

பிரமாற்றத்தில் தடை

விற்பனை ஒப்பந்தம் செயல்பட துவங்கிய நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி சென்னையில் உள்ள தொழிற்சாலையை கைபற்ற நினைக்கும்போது மைக்ரோசாப்ட் பிரச்சனையை சந்தித்தது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இத்தொழிற்சாலையில் பணியாற்றிய 6600 பணியாளர்களில் சுமார் 5700 பணியாளர்கள் கடுமையான போராட்டம் செய்த பின்னர், ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டனர்.

வருவாய்

வருவாய்

ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை ஏரியாவில் பல உற்பத்தி தொழிற்சாலைகள் இருந்தாலும், அங்கு இருக்கும் பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியமான ஒரு நோக்கியா.

நோக்கியா

நோக்கியா

நோக்கிய நிறுவனம் கடந்த ஒரு வருடமாக பல நெருக்கடிகளை சந்தித்து வந்தது அதைபற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தொழிலாளர் சங்கம்

தொழிலாளர் சங்கம்

6,600 பணியாளர்களில் 5,700 வி.ஆர்.எஸ் வாங்கியுள்ளனர் நிலையில். மீதமுள்ள 900 பணியாளர்கள் இன்னமும் நிறுவனத்தில் பணியாற்றிவருவதாகவே உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தை மூடுவது என்பது நியாமற்றது எனவும், எங்களது வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nokia to shut down its Chennai factory from Nov. 1

Telecom gear maker Nokia on Tuesday said that it will shut down its Chennai plant from November 1 as Microsoft has terminated mobile purchase agreement from the factory and it is left with no business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X