6 மாதத்தில் 12% வளர்ச்சி!! இந்திய ரயில்வே துறை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வழிதடங்களை கொண்ட இந்திய ரயில்வே துறையில் கடந்த சில காலாண்டுகளாக குறைந்த அளவிலான வருவாய் பெற்று வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற உடன் இந்திய ரயில்வே துறையை மேகத்திய நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.

 
6 மாதத்தில் 12% வளர்ச்சி!! இந்திய ரயில்வே துறை

சதானந்த கவுடா தலைமையிலான ரயில்வே துறை 2014ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் ஆதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலங்களில் இத்துறையின் வருவாய் சுமார் 12.02 சதவீதம் வளர்ச்சி பெற்று 73,404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகாலத்தில் இத்துறையின் வருவாய் 65,526 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்தின் மூலம் 48,772 கோடி ரூபாய் வரை உயர்ந்து 10.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

6 மாதத்தில் 12% வளர்ச்சி!! இந்திய ரயில்வே துறை

இதே போன்று, பயணிகள் வாயிலான வருவாயும், 16.46 சதவீதம் அதிகரித்து 18,100 கோடியிலிருந்து, 21,079 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் ரயில்வே துறையிழ் இதர வருவாய் வழிகளில் 7.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

மேலும் இத்துறையில் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது மட்டுமல்லாமல், இந்தியாவில் அதிவேக ரயில்களை அமைக்க ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways' earnings up by over 12 per cent

Railways have earned Rs 73,403.67 crore during April-September 2014 as compared to Rs 65,525.85 crore during the same period last year, registering an increase of 12.02 per cent.
Story first published: Saturday, October 11, 2014, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X