பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியது பியூச்சர் குரூப்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக சந்தையின் வளர்ச்சி உச்சத்தை பெரும் நிலையில் பிளிப்கார்ட் சிக்கலில் தவித்து வருகிறது. இந்நிலையில் இச்சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முக்கிய பணிகளை செய்து வருகின்றனர்.

 

இந்தியாவின் ஆன்லைன் கட்டமான பொருட்கள் வர்த்தக நிறுவனமான பியூச்சர் குரூப் அமேசான் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 இந்தியாவில் அமேசான்

இந்தியாவில் அமேசான்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன் முதல் பேஷன் ஆடைகள் விற்பனையில் துவங்கி, தற்போது எல்க்ட்ரானிக்ஸ், ஸ்போட்ஸ், புக்ஸ் என பல புதிய பிரிவுகளை இந்நிறுவனம் இணைத்துள்ளது.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தின் முதன் படியாக அமேசான் நிறுவனம் பியூச்சர் குரூப் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ் இந்தியாவிற்கு வந்தபோது பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவரான கிஷோர் பியானி அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இது என்ன புதுசா இருக்கு
 

இது என்ன புதுசா இருக்கு

பியூச்சர் குரூப் நிறுவனம் என்ற பெயர் புதிதாக இருக்கா?? எல்லாம் நீங்க கேள்விப்பட்ட நிறுவனம் தான் பிக் பஜார், புட் பஜார், ஹோம் டவுன், ஈசோன், எஃப்.பி.பி, சென்ட்ரல் பேஷன், பிரான்ட் பேக்ட்ரி என பல நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் கிளைகளாக உள்ளது.

40 பிரான்டுகள்

40 பிரான்டுகள்

இனி பியூச்சர் குரூப் நிறுவனத்தின் விற்பனை கட்டுப்பாட்டில் இருக்கும் லீ கூப்பர, கான்வெரஸ், இண்டிகோ நேஷன், ஸ்கூலர்ஸ் என 40க்கும் மேற்பட்ட தனியார் பிரான்டுகளை ஆன்லைன் மூலம் விற்க அமேசான் தளத்தை இந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும்.

கிஷோர் பியானி

கிஷோர் பியானி

அமேசான் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் எங்களது பொருட்களை இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும், அதேபோல் குறைந்த முதலீட்டில் அதிகப்படியான வருவாய் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சி ஆகியவை நிறுவனத்திற்கு சாதகமாக அமையும் என பியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்தார்.

தள்ளுபடி

தள்ளுபடி

பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனத்தை போல அதிரடி சலுகை, ஆர்ப்பரிக்கும் ஆஃபர்கள் என்று எல்லாம் இல்லாமல் பொருட்களுக்கும் விற்பனையாளர்கள் அளிக்கும் சிறப்பான் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிக் பில்லியன் டேவில் கிடைத்த அடியில் தாங்க முடியாமல் குனிந்த பிளிப்கார்ட் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தையை விரைவாக கைபற்ற அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future Group, Amazon India announce strategic e-commerce alliance

Kishore Biyani-led Future Group, one of India's largest brick and mortar retailers, on Monday announced it has entered into a strategic alliance with Amazon India to sell its private labels.
Story first published: Monday, October 13, 2014, 12:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X