இனி "பேஸ்புக்"கில் போட்டோவை போல பணத்தையும் "ஷேர்" செய்யலாம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நம்முடைய கருத்துக்கள் மற்றும் செய்திகளை நொடியில் உலகம் முழுவதும் பறப்பும் சமூக வலைத்தளங்கள் இன்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

உலகின் முன்னணி சமுக வலைதளமான பேஸ்புக்கை பயன்படுத்தி கேட்டாக் மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மின் பண பரிமாற்ற சேவையை அளிக்க துவங்கி உள்ளது. இச்சேவை முழுவது கட்டணங்கள் எதுமின்றி இலவசமாக அளிக்கவும் இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

அக்கவுன்ட் தேவையில்லை

அக்கவுன்ட் தேவையில்லை

இச்சேவையை பயன்படுத்த கேட்டாக் மஹிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டியதில்லை, IMPS என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை யார் வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சேவையின் பெயர்‘கேபே' (kaypay).

IMPS தொழிற்நுட்பம்

IMPS தொழிற்நுட்பம்

இந்தியாவில் 28 வங்கிகள் இத்தொழிற்நுட்பத்தின் கீழ் உள்ளது, இதனை பயன்படுத்தி கட்டணம் எதுமில்லாமல் பேஸ்புக் அக்கவுட்டை கொண்டு மிகவும் பாதுகாப்பான முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யமுடியும். இதனை மொபைலில் இருந்துக்கூட செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

தகவல் பதிவு

தகவல் பதிவு

பணம் அனுப்புவோர் கேபே இணையதளத்தில் வங்கி கணக்கு மற்றும் இதர தகவல்களை பதவு செய்யத பின்பு பணம் பெற்றுக் கொள்பவர்கள் தொடர்பான விவரங்களை பதிவு செய்யத பின்பு சில நொடிகளில் பணத்தை அனுப்பு துவங்களாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த பரிமாற்றத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் செயல்பட இருக்கிறது, இதனால் மக்கள் தகவல் திருட்டு மற்றும் பணத்திருட்ட பற்றிய கவலை தேவையில்லை என்று இந்நிறுவனத்தின் டிஜிட்டல் பணச்சேவை பரிவின் தலைவர் ஷர்மா தெரிவித்தார்.

மொபைல்

மொபைல்

தற்போது, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ‘ஐ.எம்.பி.எஸ்.' தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலமாக இந்த பரிமாற்றம் நடைபெறும்.

2500 ரூபாய் மட்டுமே

2500 ரூபாய் மட்டுமே

ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக 2500 ரூபாய் மட்டும் அனுப்ப முடியும். ஒரு நபர் அதிகபட்சமாக மாதத்திற்கு 25,000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். அதேவேளையில், பணம் பெற்றுக் கொள்பவரும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இதே போன்ற சேவையை இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கியான் ஐசிஐசிஐ வங்கி அளித்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 250 மில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இத்தகைய சேவை மூலம் இந்தியாவின் முலைமுடுக்கு எங்கும் வங்கி சேவை பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, send money to your Facebook friends real time for free

Private sector lender Kotak Mahindra Bank (KMB) on Monday launched a Facebook-based instant fund transfer service wherein one can send money to friends on the social media network real time, for free.
Story first published: Monday, October 13, 2014, 17:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X