ஏர் இந்தியாவின் மேல் ஊழல் புகார்!! விமானிகள் அமைப்பு சிபிஐயிடம் வழக்கு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 30,000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் போது பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படாத தறையிறக்கப்பட்ட 6 போயிங் 737 வகை விமானங்களுக்கு முறைகேடாக வருடத்திற்கு 6 மில்லியன் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.

 

இதுகுறித்து இந்திய விமானிகள் அமைப்பின் நிதித்துறை சிபிஐயிடம் தனி வழக்கை தொடுக்க முயன்று வருகிறது. மேலும் இவ்வமைப்பு விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் லஞ்சம் ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

பல்லு இல்லாத வாய்க்கு எதுக்கு பக்கோடா...

பல்லு இல்லாத வாய்க்கு எதுக்கு பக்கோடா...

பயணிகள் விமானமாக செயல்பட தகுதி இல்லாத 6 விமானங்களை ஏர்இந்தியா 2007ஆம் வருடம் தரையிறக்கியது (இன்சூரன்ஸ் செலுத்த தேவையில்லை), இதற்கு 3 வருடத்திற்கும் அதிகமாக, விமான ஒன்றிற்கு 1 மில்லியன் டாலர் (ஆக மொத்தம் 6 மில்லியன் டாலர்) அளவு இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தி வருகிறது. இவ்வருடம் இந்த இன்சூரன்ஸ் தொகை 95 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.

சரக்கு விமானம்

சரக்கு விமானம்

இப்படி பயணிகள் விமானம் என்ற தகுதியை இழந்த விமானங்கள் சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அப்படி இந்த 6 விமானங்களும் ஒரு தனியார் கொரியர் நிறுவனமான Gati நிறுவனத்திற்கு 2007 ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமும் 2009ஆம் முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின்னரே இந்த விமானங்களுக்கு இன்சூரன்ஸ் ஏர் இந்தியா தேவையில்லாமல் பிரிமியம் செலுத்தியது.

ஊழல்
 

ஊழல்

முன்று வருடம் என்று வைத்துக்கொண்டால் கூட 18 மில்லியன் டாலர் அளவும் தேவையில்லாமல் எதற்கு இன்சூரன்ஸ் செய்து வேண்டும். இத்தகைய பெரும் ஊழலை எதிர்த்து உடனடியாக விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று விமானிகள் அமைப்பின் தலைவர், இத்துறை அமைச்சருக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்டோபர் 1

அக்டோபர் 1

ஏர் இந்தியா நிறுவனம் 132 விமானங்களுக்கு 29 மில்லியன் டாலர் மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை செலுத்தியுள்ளது. இத்தொகை கடந்த வருடத்தை விட 18 சதவீதம் அதிகமாகும். இதில் 4 விமானகளுக்கும் மட்டும் 50,000 டாலர் என்ற குறைவான இன்சூரன்ஸ் தொகை செலுத்தியது.

குற்றம் நடந்தது என்ன??

குற்றம் நடந்தது என்ன??

இந்த இன்சூரன்ஸ் தொகை செலுத்துவதில் ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு குறிப்பிடதக்க அளவில் கட்டிங் இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

தகுதியற்ற விமானம்

தகுதியற்ற விமானம்

ஒரு தகுதியற்ற விமானத்திற்கு எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமும் காப்பீடு அளிக்காது. இப்படி இருக்கும் நிலையில் ஒன்றல்ல 6 விமானங்களுக்கு 3 வருடமாக இன்சூரன்ஸ் செலுத்தி இருக்கிறது இதனால் இரு நிறுவனத்திற்கு உள்ள அதிகாரிகளுக்கு விவரம் அறிந்தே செயல்பட்டு இருக்க வேண்டும் விமானிகள் அமைப்பு தெரிவிக்கிறது.

ஒப்பந்த முறிவு

ஒப்பந்த முறிவு

Gati கெரியர் நிறுவனத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நடந்த சரக்கு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில் சில குறிப்பிட்ட காரணங்களால் ஒப்பந்தம் 2009ஆம் முறிவுற்றது, இதற்கு நடுவர் நீதிமன்றம் gati நிறுவனத்திற்கு 26.82 கோடி ரூபாய் செலுத்த உத்திரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

விமானிகள் அமைப்பு அளித்த கடிதத்திற்கு எங்களால் தெளிவான பதில் அளிக்க முடியும் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் இது வரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்க கூடியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Neck-deep in loss, Air India spends $6 million to insure 6 grounded planes

National carrier Air India, which is sitting on a huge debt pile and surviving on the Rs 30,000- crore government bailout, is allegedly getting grounded aircrafts insured at a cost of $ 6 million in a year.
Story first published: Tuesday, October 14, 2014, 17:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X