லாபத்தில் 2% வளர்ச்சி, ஆனா வர்த்தகத்தில் சரிவு!! ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் பல துறை நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 2014ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் வகிதம் அதிகாரித்தாலும், விற்றுமுதல் அதாவது டர்னோவர் குறைந்துள்ளது. டர்னோவர் குறைந்தது என்றால் நிறுவனத்தின் வர்த்தகம் குறைந்தது என்றே பொருள், பங்குசந்தையில் முதலீட்டாளர்கள் அதை கவனிக்கவேண்டியது அவசியம்.

 

ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் ஏற்றுமதி குறைவு, கச்சா எண்ணெய் குறைவு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு அளவில் குறைவும் ஆகிய காரணங்களால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்ததுள்ளது என இந்நிறுவனம தெரவித்துள்ளது.

விற்றுமுதல்

விற்றுமுதல்

2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 1,13,396 கோடி ரூபாய், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இந்த அளவு 4.3 சதவீதம் குறைவாகும்.

லாபம்

லாபம்

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் கடந்த வருடத்தை விட 1.7 சதவீதம் அதிகரித்து 5,972 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தை அதிகம் பாதித்தது ஏற்றுமதி தான் இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சுமார் 14.7 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.

நெட்வொர்க் 18

நெட்வொர்க் 18

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நெட்வொர்க் 18 மீடியா மற்றும் அதன் இணை நிறுவனமான டிவி18 நிறுவனத்தை கைபற்றியது. இந்த கைபற்றுதல் மூலம் இந்நிறுவனம் தொலைகாட்சி, பொழுதுபோக்கு, ஒளிப்பரப்பு ஆகியவிற்றில் காலதடம் பதித்துள்ளது. வர்த்தகத்தில் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 30.4 நஷ்டத்தை சந்தித்தது.

முகேஷ் அம்பானி
 

முகேஷ் அம்பானி

பல துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெட்ரோ கெமிக்கல் துறையில் கிடைத்த வளர்ச்சி நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் தெரிவித்தார்.

புதிய துறைகள்

புதிய துறைகள்

மேலும் அவர் அடுத்த 12-18 மாதங்களில் நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தூண்களாக இருக்கும் மின்சாரம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளோம் இதன் மூலம் முதலீட்டாளர்கள் அதிகளவில் லாபம் அடைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL Q2 net almost flat at Rs 5,972 cr

During the July-September quarter, RIL, on a consolidated basis, posted a drop of 4.3% in turnover at Rs 1,13,396 crore against Rs 1,18,439 crore for July-September 2014.
Story first published: Tuesday, October 14, 2014, 11:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X