'ஸ்னாப்டீல்' நிறுவனத்தில் தாறுமாறாக குவியும் "அன்னிய முதலீடு"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் இரண்டாவது ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தில், ஜப்பானின் சாப்ட்பாங்க் கார்ப் நிறுவனம் 650 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது, இதன் மூலம் இந்நிறுவனம் இரண்டாவது மிகப்பெரிய பங்குதாரராக சாப்ட்பாங்க் உருவெடுத்துள்ளது.

 

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், ஸ்னாப்டீல் மிக்ப்பெரிய போட்டியாளராக திகழ்கிறது.

ஸ்னாப்டீல் மதிப்பீடு

ஸ்னாப்டீல் மதிப்பீடு

மேலும் தற்போது டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆகியோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதைதொடர்ந்து சாப்ட்பாங்க் நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் 2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவான மாசயோசி சன் அக்டோபர் மாதம் 27,28 தேதிகளில் இந்தியா வருகிறார், இப்போது முதலீட்டிற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். மேலும் இந்நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் முன்னாள் கூகிள் நிர்வாக குழு உறுப்பினரான நிக்கேஷ் அரோரா இந்நிறுவனத்தின் சார்பில் தலைவராகவும், ஸ்னாப்டீல் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் non-executive chairman ஆக இருப்பார்.

மாசயோசி சன்
 

மாசயோசி சன்

சாப்ட்பாங்க் நிறுவனம் ஜப்பான் நாட்டில் தொலை தொடர்பு, இ-காமர்ஸ், இண்டர்நெட், ஊடகம், தொழில்நுட்பம் சேவைகள், நிதி, ஊடகங்கள், மார்க்கெட்டிங் என பல துறைகளில் ஈடுப்பட்டு வருகிறது. ஜாப்பான் நாட்டின் பெரும் புள்ளிகளில் இவரும் ஒருவர். இவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு இப்மாத இறுதியில் வருகிறார்.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

சாப்ட்பாங்க் நிறுவனம் இந்தியாவில் தற்போது ஏர்டெல் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனம் உலகின் புதிய ஆன்லைன் ஜாம்பவானான அலிபாபா நிறுவனத்தில் 32 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்நிலையில் சிங்கப்பூரில் பதிவான பிளிப்கார்ட் நிறுவனத்தில் அமெரிக்கா டைகர் குளோபல் என்ற முதலீட்டு நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பிக் பில்லியன் டே

பிக் பில்லியன் டே

மேலும் அக்டோபர் 6ஆம் தேதி நடந்த பிக் பில்லியன் டேவில் நடந்த குளறுபடிகளை குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் வந்ததை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தை விசாரணை செய்து வருவதாகவும், வழக்குகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

1000 கோடி அபராதம்

1000 கோடி அபராதம்

இதுமட்டும் அல்லாமல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது அன்னிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகவும் சில வழக்குகள் போடப்பட்டது, இதற்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த கதையை பற்றி விபரமாக மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.. இவர்கள் செய்த திருட்டு தனத்தை என்ன வென்று சொல்வது...

அமேசான்

அமேசான்

ஸ்னாப்டீல் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்ந்து அமெசான் நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

ப்யூச்சர் குரூப்

ப்யூச்சர் குரூப்

இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் போது என்று பிக் பஜார் போன்ற நாட்டின் மிகப்பெரிய ரிடைல் நிறுவனமான ப்யூச்சர் குரூப் இச்சந்தையில் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ்

இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் அதிக பணம் புழக்கம் துறையாக இ-காமர்ஸ் இருக்கும் என்பது உறுதி, ஆனால் இதில் யார் முன்னோடியாக இருப்பார்கள் என்பதில் தான் தற்போதைய போட்டி...

ஆபத்து...

ஆபத்து...

இத்தகைய போட்டியில் மக்களை அதிகம் கவரும் ஆஃபர்கள் வீசப்படும். இதன் மூலம் மக்கள் பொருட்களின் தேவையை உணராமல் வாங்க துவங்கும்போது தான் பிரச்சனை துவங்கும், இந்த கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல் 5 நாள் உழைத்திடு, உழைத்த பணத்தை 2 நாளில் செலவு செய்திடு என்ற நிலைக்கும் மக்களை தள்ளிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Softbank's $650 million investment to value Snapdeal at $2 billion

SoftBank Corp is set to invest up to $650 million in Snapdeal in a deal that could see it become the largest shareholder with a nearly 35 per cent stake in India's second-biggest online retailer and is expected to be solemnised in the last week of October when the Japanese mobile and Internet giant's founder and CEO Masayoshi Son visits India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X