அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம், இன்றளவும் இந்தியாவை ஏழை நாடாக மட்டுமே பார்க்கும் பலர் உள்ளனர். இங்கு ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு சரியை சென்று அடைவதில்லை.

 

இப்படி இருக்கும் போது அதிகப்படியான அல்ட்ரா ஹை நெட் பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடத்தைப் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. க்ரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் என்ற நிறுவனம் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாகவும் இந்தப் புள்ளிவிவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

50 மில்லியன் டாலர் சொத்துக்கள்

50 மில்லியன் டாலர் சொத்துக்கள்

கிரெடிட் சூயிஸ் குளோபல் வெல்த் அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,000 பேரிடம் 50 மில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.

100 மில்லியன் டாலர் சொத்துக்கள்

100 மில்லியன் டாலர் சொத்துக்கள்

மேலும், இந்தியாவில் 650 பேரிடம் 100 மில்லியன் டாலருக்கு மேல் சொத்து உள்ளதாக இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

24 லட்சம் பேரிடம் 100,000 டாலர்

24 லட்சம் பேரிடம் 100,000 டாலர்

இந்தியாவில் 24 லட்சம் பேரிடம் 100,000 டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

ஆனாலும், இந்தியாவில் வறுமை!
 

ஆனாலும், இந்தியாவில் வறுமை!

பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்த போதிலும், இந்தியாவில் 95% பேர் ரூ.6 லட்சத்துக்கும் ($10,000) குறைவாகவே சொத்து வைத்துள்ளனர். இதனால் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக இந்தப் புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா நம்பர் ஒன்

அமெரிக்கா நம்பர் ஒன்

இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. சுமார் 62,800 அல்ட்ரா ஹை நெட் பணக்காரர்கள் அங்கு உள்ளனர். உலக அளவில் இது 49 சதவீதமாகும்.

சீனாவுக்கு 2வது இடம்

சீனாவுக்கு 2வது இடம்

இந்தப் பட்டியலில் சீனா 7,600 மில்லினியர்களுடன் 2வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கும் நாடுகள்: ஜெர்மனி (5,500), பிரிட்டன் (4,700), பிரான்ஸ் (4,100), ரஷ்யா (2,800), கனடா (2,600), தைவான் (2,000), பிரேசில் (1,900), தென் கொரியா (1,900), மற்றும் ஹாங் காங் (1,500).

பணக்காரர்கள் அதிகரிப்பு

பணக்காரர்கள் அதிகரிப்பு

'பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே போகிறான்; ஏழை ஏழையாகிக் கொண்டே போகிறான்' என்ற பழமொழியைத்தான் இந்தக் கணக்கெடுப்பும் தெரிவிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மில்லினியர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரிக்குமாம்!

சீனாவில் டபுள்

சீனாவில் டபுள்

2019க்குள் சீனாவில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை டபுளாகும் என்றும் இக்கணக்கெடுப்பு கூறுகிறது. இந்திய மில்லினியர்களின் எண்ணிக்கை 61 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல் இந்தோனேசியாவில் 64 சதவீதமும், மெக்சிகோவில் 57 சதவீதமும், சிங்கப்பூரில் 50 சதவீதமும், பிரேசிலில் 47 சதவீதமும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Home To 11th Largest Population Of Uber-Rich People

India is home to 11th largest population of Ultra High Net Worth Individuals, but also figures among countries with “very high wealth inequality” with a large number of its residents being in the lower wealth strata, says a new report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X