கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 35,000 பேருக்கு வேலை: டிசிஎஸ் அதிரடி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டாடா குழுமத்தின் சாப்ட்வேர் நிறுவன கிளையான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் வரும் 2015-16ஆம் நிதியாண்டில் கேம்பஸ் நேர்முகத் தேர்வுகள் மூலம் 35,000 ஃப்ரெஷ்ஷர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக, இந்தியாவின் மிகப் பெரும் சாஃப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் அறிவித்துள்ளது.

 

படித்து முடித்து பல ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காமல் பல ஆயிரம் பேர் அல்லாடிக் கொண்டிருக்கும்போது, படித்து முடிப்பதற்குள்ளாகவே வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் நாட்டிலுள்ள முக்கியமான கல்வி நிறுவனங்களில் இருக்கும் சிறந்த மாணவ-மாணவிகளைத் தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்காக முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் ஆண்டுதோறும் கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்துவது வழக்கம்.

2014-15ல் 25,000 ஃப்ரெஷ்ஷர்களுக்கு...

2014-15ல் 25,000 ஃப்ரெஷ்ஷர்களுக்கு...

அந்த வகையில், பல ஆண்டுகளாக கேம்பஸ் இண்டர்வியூக்களில் ஃப்ரெஷ்ஷர்களைத் தேர்ந்தெடுக்கும் டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு (2014-15) தன் நிறுவனத்தில் பணிபுரிய 25,000 பேரைத் தேர்ந்தெடுக்கிறது. அவர்களில், 71-72% பேர் ஃப்ரெஷ்ஷர்கள்தான்.

2015-16ல் 35,000...

2015-16ல் 35,000...

இந்த எண்ணிக்கையை அடுத்த ஆண்டு (2015-16) 35,000ஆக உயர்த்த டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது.

கேம்பஸ் விசிட் ஆரம்பம்

கேம்பஸ் விசிட் ஆரம்பம்

இதற்கான அனைத்து வேலைகளையும் டிசிஎஸ் இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, முக்கியக் கல்வி நிறுவனங்களை டிசிஎஸ் அதிகாரிகள் முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர்.

டார்கெட் 55,000
 

டார்கெட் 55,000

தற்போதைய நிலவரப்படி 55,000 பேரை நியமிப்பதற்கு டிசிஎஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், அடுத்த 2015-16க்குள் 35,000 பேரை கேம்பஸ்கள் மூலம் தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாக அந்த நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் அஜோய் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜூலை-செப்டம்பரில் 13.2% லாபம்

ஜூலை-செப்டம்பரில் 13.2% லாபம்

இதற்கிடையே, கடந்த ஜூலை-செப்டம்பர் 2014 காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 13.2% (ரூ.5,244 கோடி) லாபம் கண்டிருப்பதாக அதன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bullish TCS to up campus hiring in FY16 to 35,000

Exuding bullish sentiment, India's largest software exporter TCS today said it will offer 35,000 jobs for freshers at campuses in 2015-16, 10,000 more than offered in the current fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X