ஆன்லைன் விற்பனை மோகம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூரை தலைமையாக கொண்டு செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் நிறுவனம் தங்களது விற்பனையை அதிகரிக்க இண்டர்நெட்டை மூலம் செயல்படும் ஆன்லைன் சில்லறை வர்த்தக முறையை பயன்படுத்தியுள்ளனர்.

 

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதன் மூலம் இத்தகைய நிறுவனங்கள் குறைந்த காலத்தில் சந்தையை கைபற்றியுள்ளனர். இதே பார்மூலாவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் நிறுவனம் பாலோ செய்ய துவங்கியுள்ளது.

முதல் திட்டமே மறுப்பு

முதல் திட்டமே மறுப்பு

இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் வைஷ்னவி, ஆன்லைன் விற்பனை குறித்து சில வருடங்களுக்கு முன் அவர்களது தந்தை கிருஷ்ணன் அவர்களிடம் தெரிவிக்கும் போது அவர் சிரித்தார் என்றும், வியாபாரத்தை பற்றி உனக்கு இன்னும் முழுமையாக தெரிவில்லை என்றும் அன்பாய் அறிவுறை கூறினர் என்று வைஷ்னவி கூறினார்.

வைஷ்னவி மற்றும் ஹரித்தா

வைஷ்னவி மற்றும் ஹரித்தா

தமிழ்நாட்டில் ஆன்லைன் விற்பனைக்கு அறிமுகம் தேவையில்லாத நிலையில் உள்ள நிலையிலும், ஆன்லைன் வியாபாரத்தில் மீது மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றுள்ள நிலையிலும் நிறுவனத்தின் வியாபாத்தை இணையதளம் மூலம் கொண்டு செல்ல அதுவே சரியான தருணம் என்று இந்நிறுவனத்தின் இயக்குனர்களான வைஷ்னவி மற்றும் ஹரித்தா தெரிவித்தானர்.

பைகிருஷ்ணாஸ்விட்ஸ்.காம்
 

பைகிருஷ்ணாஸ்விட்ஸ்.காம்

மேலும் திபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாப்படுவதால் இதுவே சரியான தருணம் என்று பைகிருஷ்ணாஸ்விட்ஸ்.காம் என்ற இணைய தளம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளா வரை தங்களது விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளனர்.

பேஸ்புக்

பேஸ்புக்

மேலும் இத்தளத்திற்கு அதிகப்படியான ஆர்டர்களை கொண்டு வர உதவுவது சமுக வளைதளமான பேஸ்புக் வழியாக தான் என்று வைஷ்ணவி தெரிவித்தார்.

27 மணிநேரத்தில் டெலிவரி

27 மணிநேரத்தில் டெலிவரி

மேலும் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த 27 மணிநேரங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எங்கும் டெலிவரி செய்யப்படுகிறது.

விநியோகம்

விநியோகம்

மேலும் ஆர்டர் பெறுவதில் சில பிரச்சனைகள் இருந்தாலும், அதை முறையாக மற்றும் சரியான நேரத்தில் விநியோகம் செய்வதில் அதிகப்படியான பிரச்சனைகளை நாங்களை சந்திக்கிறோம். மேலும் பதார்த்தங்கள் புதுமை மாறாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு 24 - 27 மணிநேரத்தில் டேப்பர் ப்ருபிங் பேகேஜ்ஜில் டெலிவரி செய்து வருகிறோம் என்று ஹரித்தா தெரவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri Krishna Sweets goes online

When Vaishnavi approached her father, M Krishnan, Managing Director of Sri Krishna Sweets, eight years ago about selling the company's products online, he brushed the idea aside, stating “You don't know the business”.
Story first published: Monday, October 20, 2014, 16:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X