சர்ச்சையில் சிக்கிய சத்ய நாடெல்லாவிற்கு 84 மில்லியன் டாலர் சம்பளம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெட்மண்ட்: சமீபத்தில் பெண்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வை கேட்க கூடாது என்று பேசி சரச்சையில் சிக்கிக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாடெல்லா விற்கு நடப்பு நிதியாண்டிற்கான சம்பளம் மற்றும் போனஸ் தொகையாக சுமார் 84.3 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

 

பெண்களின் சம்பள உயர்வு பற்றிய இவரது கருத்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பத்திரிக்கையில் முதல் பக்க செய்தியாக வந்தது, இதற்கு அவர் பதில் அளிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் அனைவருக்கும் மின்னஞசல் மூலம் மன்னிப்பு கேட்டார்.

3.6 மில்லியன் டாலர் போனஸ்

3.6 மில்லியன் டாலர் போனஸ்

நடப்பு நிதியாண்டின் ஜூன் 30 தேதி முடிவில் சத்ய நாடெல்லா சம்பளமாக $918,917 அமெரிக்க டாலரும், 3.6 மில்லியன் டாலர் போன்ஸ் தொகை பெறுகிறார் என்று இந்நிறுவனம் பங்கு சந்தைக்கும் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

பங்குகள்

பங்குகள்

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நாடெல்லாவிற்கு 79.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அளிக்க உள்ளது. இது நீண்ட கால தவணை முறையில் அவருக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.

உழைப்பு ஊதியம்

உழைப்பு ஊதியம்

இதுமட்டும் அல்லாமல் இவருக்கு திறன் அடிப்படையில் 59.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அளிக்கவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இத்தொகை 2019ஆம் வருடம் கிடைக்காது, அமெரிக்க பங்குச்சந்தையில் S&P 500 பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை பொருத்து இவருக்கு திறன் சார்ந்த பங்குகள் அளிக்கப்படும்.

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர்
 

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர்

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமாந மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில் கேட்ஸ் மற்றம் ஸ்டீவ் பால்மர் ஆகிய இரு நிறுவனர்களும் வெளியேறிய நிலையில் இந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த சத்ய நடெல்லா தேர்ந்தெடுத்தார்.

இந்திய பயணம்

இந்திய பயணம்

மேலும் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்த சத்ய நாடெல்லா ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயடு மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவ் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft CEO Satya Nadella gets $84 million pay package

Microsoft has given its new CEO Satya Nadella a pay package worth 84.3 million dollar, most of it in the form of long-term stock awards.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X