இந்தியாவில் வேலைவாய்ப்புகள் உருவாவதில் 19% சரிவு!! அசோசாம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மந்தமான வளர்ச்சி மற்றும் குறைவான உள்நாட்டு உற்பத்தியின் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் ஆற்றள் சுமார் 19 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் 32 துறைகளில் 23 துறைகளில் முக்கியமாக ஐடி, இன்ப்ரா மற்றும் வான்வழி போக்குவரத்து துறைகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியை சேர்ந்த அசோசாம் என்கிற சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தியா பொருளாதாரத்தின் இந்த மந்தமான போக்கிற்கு முக்கிய காரணம் உலக பொருளாதாரத்தின் பலவீனமான நிலை.

கார்ப்பரேட் நிறுவனங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள்

இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தின் மந்தமான நிலையின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆட்கள் சேர்க்கும் பணி மந்தமாக உள்ளது.

அசோசாம்

அசோசாம்

இந்நிறுவனம் நடத்திய ஜாப் டோட்டா டிராக்கிங் ஆய்வில் இந்தியாவில் 32 துறைகளில் 23 துறைகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தப்பித்தது அட்டோமொபைல் நிறுவனம் மட்டும் தான் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் 37.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகல் மீடியா, இன்சூரன்ஸ், பார்மா, ரீடைல், விமான போக்குவரத்து, மற்றும் எஃப்.எம்.சி.ஜி . பாதிக்கப்பட்ட துறைகளில் முன்னோடி ரியல் எஸ்டேட் துறைதான்.

32 துறைகள்
 

32 துறைகள்

இந்தியாவில் 32துறைகளில் இருக்கும் 4500 கார்ப்பரேட் நிறுவனங்கள் 2014ஆம் நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் 1.32 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 1.65 லட்சமாக இருந்தது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

பொதுவாக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் துறைகளில் முதன்மையாக இருப்பது ஐடி துறை தான். ஆனால் இக்காலகட்டத்தின் நோக்கியா, யாஹூ, ஐபிஎம், போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பணியாளர்களை அதிகளவில் வெளியேற்றி வந்தனர்.

வேலைவாய்ப்பு உருவாக்குதல்

வேலைவாய்ப்பு உருவாக்குதல்

2014ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் அளவில் அதிகளவில் சரிவை தளுவிய துறைகளை தற்போது பார்போம் கல்வி மற்றும் அதனை சார்ந்த துறைகள்(17.8% சரிவு) இன்சூரன்ஸ் துறை (28% சரிவு), உற்பத்தி துறை (29.6% சரிவு), இண்ஜினியரிங் (23.9% சரிவு), வங்கித்துறை (3.9% சரிவு) மற்றும் எஃப்.எம்.சி.ஜி (23.2% சரிவு).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Job postings see sharp drop in July-September: Assocham

Amidst persisting weaknesses in the economy, job generation in India Inc saw a sharp drop of over 19% during July-September, 2014 over the previous three-month period, with as many as 23 of 32 sectors including the IT, hospitality, infrastructure and aviation reporting negative growth, according to Assocham tracking of data.
Story first published: Thursday, October 23, 2014, 15:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X