சுவிஸ் வங்கிகளில் புதைந்திருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் எவ்வளவு தெரியுமா???

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுவிஸ் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த அனைவரின் பெயரையும் மத்திய அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த பெரும் புள்ளிகள் பற்றி இதுவரை எந்த நாடும் இப்படி பகிரங்கமாக பெயர் பட்டியலை வெளியிட்டதில்லை. இச்செயலுக்கு இந்தியா மக்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் தங்களின் பாசிடிவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

கருப்பு பணம்

கருப்பு பணம்

கருப்பு பணம் இந்தியாவிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றால் அது சாத்தியப்படாத ஒன்று. இதற்கு சில மாதங்கள் தேவைப்படும், தற்போது இப்பட்டியலில் உள்ள கணக்காளர்களை விசாரணை செய்து வருகிறது கருப்பு பணம் ஒழிப்பு அமைப்பு. விசாரணை முடிந்த பின்னரே பணத்தை இந்தியாவிற்குள் கொண்ட வர முடியும்.

30 பில்லியன் டாலர்

30 பில்லியன் டாலர்

விசாரணை முடிந்து கருப்பு பணம் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் இந்திய அந்நிய செலாவணியின் அளவு சுமார் 30 - 35 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என் பாங்க் ஆஃப் ஆமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.

ஆய்வுகள்
 

ஆய்வுகள்

அன்னிய செலவாணிக்கு வருவது 35 பில்லியன் டாலர் என்றாலும், மத்திய அரசு போராடுவது அதற்கு மட்டும் அல்ல இந்தியர்களின் சொத்துகள் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருப்பது 200 பில்லியன் டாலர். இதனை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

ஆய்வுகள் கணிப்புகள் எல்லாம் சரியானதா??

ஆய்வுகள் கணிப்புகள் எல்லாம் சரியானதா??

இதுவரை இந்தியர்களின் கருப்பு பணம் எவ்வளவு என்பதன் சரியான புள்ளிவிபரம் யாரும் அறிவிக்கவில்லை, தற்போது வெளிவரும் தகவல் அனைத்தும் தனியார் நிறுவனங்களின் ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் மட்டுமே.

அத்வானி

அத்வானி

பாஜக-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான எல்.கே அத்வானி 2011ஆம் ஆண்டு தான் கருப்பு பணம் குறித்து வாஷிங்டன் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியார்கள் வெளிநாடு வங்கிகளில் கருப்பு பணமாக சுமார் 28 இலட்சம் கோடி அதாவது 466 பில்லியன் டாலர் இருப்பதாக தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில் என்ன நிலவரம்

2012ஆம் ஆண்டில் என்ன நிலவரம்

2012ஆம் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அனைத்து சுவிஸ் வங்கிகளிலும் சேர்ந்து இந்தியர்கள் வைசத்துள்ள பணம் வெறும் 2.1 பில்லியன் டலார் மட்டும் தான் என குறிப்பிடபட்டுள்ளது. 466 பில்லியன் டாலருக்கும் 2.1 பில்லியன் டாலருக்கும் ரொம்ப தூரம்.

உண்மை வெளியில் வரும்..

உண்மை வெளியில் வரும்..

கணிப்புகளும் சரி, ஆய்வுகளும் சரி அனைத்தும் ஒன்றுக்கொன்று முறன்பாடாகவே உள்ளது. இதனால் மத்திய நிதியமைச்சகம் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தின் அளவை பற்றி குறிப்பிட்டுள்ளது. இவ்வழக்கின் முடிவுகள் வெளிவரும் போது உண்மை தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Much 'Black Money' Do Indians Have Abroad?

Even as the Indian government took the first real step towards getting back black money, or undeclared wealth allegedly stashed away by Indians in overseas accounts, by naming three such people in the Supreme Court, what is the actual quantum of such funds being talked about is not clear.
Story first published: Wednesday, October 29, 2014, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X